நெகிரி செம்பிலானில் மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகளின் வளர்ச்சித் திட்டம்!

- Muthu Kumar
- 08 May, 2025
(நாகேந்திரன் வேலாயுதம்)
ஆயர் குரோ. மே 7-
எதிர்காலத்தில் ஏதேனும் தொற்றுநோய் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்பட்டால், வெளிநாட்டுத் தொழிலாளர்களை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் எளிதாக இருக்கும் வகையில், சிஎல்க்யூ எனும் மையப்படுத்தப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகளை உருவாக்குவதை நோக்கி நெகிரி செம்பிலான் நகர்கிறது என அம்மாநில வீடமைப்பு, ஊராட்சி மற்றும் போக்குவரத்து துறைக்கான அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் ஜம்புநாதன் கூறினார்.
அதுமட்டுமின்றி, குடியிருப்புப் பகுதிகளில் வெளிநாட்டினரால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் பல்வேறு பிரச்சினைகளைக் குறைக்கவும் இது உதவுகிறது.அரசாங்கமும் இந்த ஆண்டு முதல் வெளிநாட்டு தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பதற்கான புதிய ஒப்புதல்களை அனுமதிக்கவில்லை.ஆனால் 2025 முதல் 2027 வரையிலான 3 ஆண்டு காலத்திற்குள், டிஎல்க்யூ பிரிவின் கீழ் வணிகப் பகுதிகளில் தங்குமிடமும் அனுமதிக்கப்படும்.
எனவே, 3 ஆண்டுகளில், தனியார் மேம்பாட்டாளர்களால் அதிகமான சிஎல்க்யூ-களை உருவாக்க முடியும் என்று நெகிரி செம்பிலான் அரசாங்கம் நம்புகிறது என அருள்குமார் தெரிவித்தார்.ஒரு பகுதியில் போதுமான சிஎல்க்யூ கிடைத்தவுடன், பல அரசு நிறுவனங்கள் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக அமலாக்கத்தைத் தொடங்கும்.
இந்த 3 ஆண்டுகளுக்குள்,அனைத்து வீட்டுப் பகுதிகளும் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் ஆக்கிரமிக்கப்படாமல், அனைத்தும் சிஎல்க்யூக்கு மாற்றப்படும் என்று நம்பப்படுகிறது. சிஎல்க்யூ கட்டுமானம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்று தாம் நம்புவதாக அருள்குமார் குறிப்பிட்டார்.
மேலும் சிஎல்க்யூ-இன் அடுக்குமாடி குடியிருப்பு கருத்தாக்கத்தை மாநில அரசு ஊக்குவிக்கிறது.இது வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வசதியான சூழ்நிலையில் வாழவும், பல்வேறு விஷயங்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும் அனுமதிக்கிறது என இங்கு மலாக்கா, ஆயர் குரோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் அவ்வாறு தெரிவித்தார்.
Negeri Sembilan merancang binaan CLQ, iaitu penempatan pekerja asing berpusat, untuk mudahkan kawalan semasa wabak dan kurangkan isu sosial. Kerajaan negeri galak pembinaan oleh pemaju swasta dalam masa tiga tahun akan datang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *