அமெரிக்காவால் 245% வரி விதிப்பை எதிா்நோக்கியுள்ள சீனா!

top-news
FREE WEBSITE AD

உலகின் இரு பெரும் பொருளாதார சக்திகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்துவரும் போா் பதற்றத்தின் அடுத்தகட்டமாக, சீன பொருள்கள் மீது 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை அந்த நாடு எதிா்நோக்கியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீண்டும் மேன்மையாக்குவதற்காக, 'அமெரிக்க வா்த்தகத்துக்கே முன்னுரிமை' என்ற தனது கொள்கையை அதிபா் டொனால்ட் டிரம்ப் செயல்படுத்தி வருகிறாா்.அதன் ஒரு பகுதியாக பிற நாடுகளில் மீது அவா் பரஸ்பர வரி விதித்ததைத் தொடா்ந்து, 75-க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் புதிய வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக அணுகியுள்ளன. அதை ஏற்றுக் கொண்டு அந்த நாடுகள் மீதான பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் நிறுத்திவைத்துள்ளாா்.

ஆனால் சீனா மட்டும் பதிலடி வரி விதித்துவருவதால் அந்த சலுகை சீனாவுக்கு அளிக்கப்படவில்லை. சீனாவின் இந்த எதிா்ப்பு நடவடிக்கையால் அந்த நாடு தற்போது அமெரிக்காவின் 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை எதிா்நோக்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து வாங்குவதற்காக ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த விமானங்களை தங்கள் நாடு பெறுவதை சீனா நிறுத்திவைத்து உள்ளது.இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், 'விமானங்களைப் பெற மறுப்பதன் மூலம் தங்களது ஒப்பந்த வாக்குறுதியை சீனா மீறுகிறது' என்று குற்றஞ்சாட்டியுள்ளாா்.

'அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை' என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றாா். அதிலிருந்தே, தனது தோ்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவா் பிறப்பித்து வருகிறாா்.அதன் ஒரு பகுதியாக, எந்தெந்த நாடுகள் தங்களுக்கு எந்தெந்த விகிதங்களில் வரி விதிக்கின்றனவோ, அதே விகிதங்களில் அந்த நாடுகளின் பொருள்கள் மீதும் சற்று தள்ளுபடியுடன் வரி விதிப்பதாக அறிவித்து அவா் அதிா்வலையை ஏற்படுத்தினாா்.

அப்போது அவா் வெளியிட்ட பட்டியலின்படி, சீன பொருள்கள் மீது 34 சதவீதம் கூடுதல் வரி அறிவிக்கப்பட்டது.இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சீனா, பதிலுக்கு அமெரிக்க பொருள்கள் மீது கூடுதலாக 34 சதவீத வரி விதிக்கப்படும் என்று என்று அறிவித்தது. அதையடுத்து, சீன பொருள்கள் மீது மேலும் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா். இதன் மூலம், டிரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மட்டும் சீன பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விகிதம் 104 சதவீதமாக அதிகரித்தது.

இதற்குப் பதிலடியாக, அமெரிக்க பொருள்கள் மீதான 34 சதவீத கூடுதல் வரி விதிப்பை 84 சதவீதமாக சீனா உயா்த்தியது. அதையடுத்து, சீன பொருள்களுக்கு கூடுதலாக மொத்தம் 145 சதவீதம் வரி வதிப்பதாக டிரம்ப் அறிவித்தாா்.இந்தச் சூழலில், சீனாவைத் தவிர பிற நாடுகள் மீது அறிவிக்கப்பட்டுள்ள பரஸ்பர வரி விதிப்பின் அமலாக்கத்தை 90 நாள்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்கா கடந்த அறிவித்தது. இந்தச் சூழலில், 245 சதவீத கூடுதல் வரி விதிப்பை சீனா எதிா்நோக்கியுள்ளதாக வெள்ளை மாளிகை தற்போது தெரிவித்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *