ரினி தோட்டத்தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டி!

- Muthu Kumar
- 20 Apr, 2025
(கோகி கருணாநிதி)
ஸ்கூடாய், ஏப்.20-
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 54-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் அஸ்மான் ஹாஷிம் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு புறப்பாடத் துணைத்தலைமையாசிரியை மு. சந்திரமோகினியின் தலைமையில், பொறுப்பாசிரியர்கள் மா. ரேவதி மற்றும் ந. மாரியம்மா ஆகியோரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று மாணவர்களின் உற்சாகத்துடன் ஒலித்தது.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் வெளியரங்கில் ஏற்பாடாகி,
போட்டி மேலும் விறுவிறுப்பாக மாறியது.பள்ளியின் தலைமையாசிரியை சு. தமிழ்ச்செல்வி மாணவர்கள் கல்வியுடன் விளையாட்டிலும் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்வில் சிறப்புப் பிரமுகராக கலந்துகொண்ட சுல்தானா ரொஹாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாரன் இராமன் மாணவர்கள் எநிர்காலத்தில் உலகளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அளவிற்கு வளர வேண்டும் என தனது உரையில் தெரிவித்தார்.
அவரே இந்நிகழ்வை தீபஒளி ஏற்றி துவக்கி, நன்கொடை அளித்து மாணவர்களை ஊக்குவித்தார்.பள்ளியின் இளஞ்சிறார்கள் ஜிம்ராமா நடனம் வழங்கி அனைவரையும் கவர்ந்தனர். இசைக்குழுவின் நிகழ்ச்சியும் பாராட்டைப் பெற்றது. போட்டிகளில் ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் ஆண், பெண் என இரு பிரிவாக பங்கேற்று 80மீ, 100மீ, 200மீ. 4X100மீ, 4X200மீ ஓட்டப் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்தனர். குழுப்போட்டிகளாக ஈட்டி எறிதல், குண்டு வீசுதல் ஆகியவையும் நடத்தப்பட்டன.
நிறைவுவிழாவில் கலந்து கொண்ட ஜொகூர் மாநிலத்திற்கான பாலர் மற்றும் ஆரம்பப்பள்ளிகள் உதவி இயக்குநர், தமிழ்ப்பள்ளிகள் அமைப்பாளர் இரா. இரவிச்சந்திரன் மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகளை வழங்கி வாழ்த்தினார்.இந்நிகழ்வில் நில இல்லம் ஏராளமான புள்ளிகள் பெற்று சாதனையோடு வெற்றி கண்டது.
மஞ்சள் இல்லம் அணிவகுப்பில் முதன்மையைப் பெற்றது. பள்ளிச் சீருடை அணிவகுப்பில் குருளையர் இயக்கம் முன்னிலை பெற்றது. இவ்வாண்டு சிறந்த விளையாட்டு வீரராக ஹவின்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், சிறந்த வீராங்கனையாக சித்தேஸ்வரி பாராட்டைப் பெற்றார்.
Rini Estate Tamil School menganjurkan sukan tahunan ke-54 dengan meriah di UTM. Pelajar sertai pelbagai acara sukan. Pengetua tekankan kepentingan akademik dan sukan. Hadiah disampaikan oleh tetamu khas. Rumah Nil menang keseluruhan, Havinraj dan Sitheswari dinobatkan terbaik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *