சிவநேசனின் காலகட்டம் தமிழ்ப்பள்ளி மற்றும் கோவில்களுக்கு பொற்காலம்!

- Muthu Kumar
- 31 May, 2025
(ஆர்.கிருஷ்ணன்)
சங்காய்,மே 31-
மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக சுங்காய் சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் பொறுப்பேற்றிருக்கும் காலகட்டமானது இம்மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கோவில்களுக்கும் நம்பிக்கையான பொற்காலம் என தாப்பா ஊராட்சி மன்ற உறுப்பினர் கவுன்சிலருமான பா.ஜெயகுமார் புகழாரம் சூட்டினார்.
பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் மட்டுமின்றி பொது இயக்கங்களும் கடந்தகாலங்களைப் போல் அல்லாமல் மாநில ஆட்சிகுழு உறுப்பினராக சிவநேசன் தலைமையேற்றது முதல் தனிச் சிறப்பாகவே இயங்கி வருகின்றன.அதன் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு எல்லா காலகட்டத்திலும் கவனிக்கப்படுவதோடு அதற்கான நிதியுதவியோடு மானியங்களையும் நிறைவாகவே சிவநேசன் வழங்கி வருகிறார் என்றார் ஜெயகுமார்.
கங்காய் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியை சிவநேசனின் பிரதிநிதியாக கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து பேசுகையில் ஜெயகுமார் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் சிவநேசனின் அக்கறையும் கவனமும் தனித்துவமானது. அவர் இம்மாநிலத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் எல்லா நிலையிலும் சாதிக்க வேண்டும்,வெற்றிகளை குவிக்க வேண்டும் என இலக்கு கொண்டிருப்பவர் என்பதையும் குறிப்பிட்டார்.
முன்னதாக தலைமையுரை ஆற்றிய பள்ளியின் தலைமையாசிரியர் தியாரன் சுங்காய் தமிழ்ப்பள்ளிக்கு கடந்தாண்டு வெ.25 ஆயிரத்தை சிவநேசன் வழங்கியதாகவும் இவ்வாண்டு இதுவரை வெ.14ஆயிரம் வழங்கியிருப்பதாகவும் கூறினார். மேலும்,தமிழ்ப்பள்ளிகளுக்கும் தலைமையாசிரியர் மன்றத்திற்கும் நிறைவான மானியம் வழங்கியிருப்பதோடு தமிழ்ப்பள்ளி சார்ந்த எல்லா மானியத்தோடு அந்நிகழ்ச்சிகளின் வெற்றிகளுக்கும் சிவநேசன் உறுதுணையாக இருப்பதாகவும் தியாரன் குறிப்பிட்டார்.
மேலும்,பத்தாங் பாடாங் தலைமையாசிரியர் மன்றத்திற்கும் மானியத்தோடு பெரும் உந்துதலையும் சிவநேசன் தொடர்ந்து வழங்கி வருவதால் இவ்வட்டார தமிழ்ப்பள்ளிகள் தனித்துவமாக இயங்கி வருவதாகவும் கூறினார்.மாணவர்களின் பங்களிப்போடு சுங்கை தமிழ்ப்பள்ளியின் 62ஆவது விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
Sivanesan, ADUN Sungkai, dipuji atas sumbangan dan keprihatinannya terhadap pembangunan sekolah Tamil dan kuil di Perak. Beliau menyediakan bantuan kewangan serta geran kepada institusi tersebut, menunjukkan komitmen tinggi terhadap kemajuan pendidikan dan masyarakat India.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *