எல் கௌனா ஸ்குவாஷ் போட்டி இரண்டாம் நிலைக்கு முன்னேறிய சிவசங்கரி!

- Muthu Kumar
- 14 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 14-
நாட்டின் முன்னணி மகளிர் ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, சகநாட்டவரான ஐரா அஸ்மானை வெறும் 17 நிமிடங்களில் தோற்கடித்து 2025 எல் கௌனா அனைத்துலக ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
எகிப்தின் எல் கௌனா ஸ்குவாஷ் வளாகத்தில் நடந்த முதல் சுற்று ஆட்டம் முழுவதும் உலகின் 11-வது நிலை வீராங்கனை ஆதிக்கம் செலுத்தும் ஆட்டத்தை வெளிப் படுத்தி 11:4, 11-5, 11-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
2023 துவாங்கு முஹ்ரிஸ் டிராபி, 2025 நியூசிலாந்து ஓப னில் ஐராவை தோற்கடித்த பிறகு, உலகின் 30வது தரவரிசை வீராங்கனைக்கு எதிராக சிவசங்கரி பெறும் மூன்றாவது வெற்றி இதுவாகும்.போட்டியின் ஏழாவது நிலை வீராங்கனை அடுத்ததாக எகிப்திய வீராங்கனை சல்மா ஹானியை எதிர்கொள்வார். அவர் தொடக்க ஆட்டத்தில் பெல்ஜிய பிரதிநிதி நெலே கிலிஸ்-கோலை தோற்கடித்தார்.
சிவசங்கரியைப் பின்பற்றி, மற்றொரு தேசிய மகளிர் ஸ்குவாஷ் சாம்பியனான ரேச்சல் அர்னால்ட், 50 நிமிடங்கள் நீடித்த ஒரு விறுவிறுப்பான போட்டியில், சொந்த வீராங்கனை ஜெய்னா மிக்காவியை 11-5, 11-8, 11-13, 10-12, 11-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். காலிறுதிக்கு முன்னேறும் முயற்சியில், ரேச்சல், நான்காவது நிலை வீராங்கனையான அமெரிக்காவைச் சேர்ந்த ஒலிவியா வீவரை எதிர்கொள்கிறார்.
S. Sivasangari menewaskan Aira Asman dalam 17 minit untuk mara ke pusingan kedua El Gouna Squash Open 2025. Rachel Arnold turut menang perlawanan lima set menentang Jayna Mikaeve dan akan bertemu Olivia Weaver dalam usaha ke suku akhir.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *