யோகாசனப் போட்டியில் திவ்யா ஸ்ரீநாராயணி சாதனை!

- Muthu Kumar
- 08 Apr, 2025
கோலாலம்பூர், ஏப். 8-
மலேசியாவில் இந்திய பாரம்பரிய விளையாட்டு யோகாசனமான மல்லகாம்பை அமைப்பு (சுயிறு யோகா, துருவ யோகா, ஏரியல் யோகா, பட்டு யோகா, போன்ற பிற விளையாட்டுகள்) பாதுகாத்து ஊக்குவிக்கும் ஓர் அரசு சாரா அமைப்பாகும்.
சுவிட்சர்லாந்தின் அனைத்துலக யோகா கூட்டமைப்பின் அனுசரணையில் உள்ள அந்த அமைப்பு இம்மாதம் ஏப்ரல் 4ஆம் தேதி லிம் கோக் விங் பல்கலைக்கழகத்தில் தேசிய யோகாசன போட்டியை நடத்தியது. இந்த தேசிய அளவிலான போட்டி சிலாங்கூர், பினாங்கு, பேராக், கெடா போன்ற பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டது. 9 முதல் 12 வயது வரையிலான பெண்கள் பிரிவில், திவ்யா ஸ்ரீ நாராயணி ஆறுமுகம் சிலாங்கூரைப் பிரதிநிதித்து முதலிடத்தைப் பிடித்தார்.
தற்போது அவர் மாஸ்டர் சேகர் குருவால் சேகா இன்டர்காண்டினென்டல் யோகா கூட்டணியின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.
மலேசியா முழுவதிலுமிருந்து வந்த பங்கேற்பாளர்களுடன் திவ்யா ஸ்ரீ நாராயணி போட்டியிட்டார். அவரின் போட்டிக்கான செயல்திறன் தனித்து அடையாளமாகத் திகழ்ந்து. தங்கப் பதக்கத்துடன் முதலிடத்தைப் பெற்று திவ்யா ஸ்ரீ நாராயணி பெருமை சேர்த்தது பெருமைக்குரியதாக அமைந்தது.
அவர் தற்போது பத்துகேவ்ஸ் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் 4 ஆம் ஆண்டு மாணவராவார்.இந்த இளம் விளையாட்டு வீரரின் வெற்றி, பேராசிரியர் சேகர் குருவின் தலைமையில் பல மாதங்களாக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இப்போது சாதனை படைத்துள்ளார்.
திவ்யா ஸ்ரீ நாராயணியின் இந்த சாதனை பல மாணவர்களை அனைத்துலக அளவிலான
வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளது.திவ்யா ஸ்ரீ நாராயணியின் பெற்றோர், ஆசிரியர் உள்ளிட்டோரின் பங்களிப்பு ஆகியவை அவரின் சாதனைக்கு மகுடம் சூட்டியுள்ளது.
Divya Sri Narayani memenangi tempat pertama dalam pertandingan Yoga Kebangsaan di Lim Kok Wing, mewakili Selangor. Pelajar Tahun 4 SJKT Batu Caves ini dilatih oleh Master Sekar. Kemenangan beliau dorong semangat pelajar lain ke peringkat antarabangsa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *