விபத்தில் 12 வயது சிறுமி பலி! 7 பேர் காயம்!

top-news

ஜூன் 28,


கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் வந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 12 வயது சிறுமி உயிரிழந்ததாகவும் 7 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ஜாசினில் இந்த விபத்து ஏற்பட்டதாக் ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Rusli Mat தெரிவித்தார். கட்டுப்பாட்டை இழந்த HONDA CITY வாகனம் Toyota Vellfire வாகனத்தை மோதியதாக நம்பப்படுகிறது. 

HONDA CITY வாகனத்தின் டயர் வெடித்ததால் சாலையின் தடுப்புச் சுவரை மோதி Toyota Vellfire வாகனத்தை மோதியதாகவும் Toyota Vellfire வாகனத்திலிருந்த 12 வயது சிறுமி வாகனத்திலிருந்து தூக்கிவிசப்பட்டதில் பின்னால் வந்த மற்றொரு வாகனம் சிறுமியை மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஜாசின் மாவட்டக் காவல் ஆணையர் Mohamad Rusli Mat தெரிவித்தார். Toyota Vellfire வாகனத்திலிருந்த 4 பெரியவர்களும் 3 குழந்தைகளும் ஜாசின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்ற இரு வாகனமோட்டிகளும் காயமின்றி தப்பியதாகவும் தெரியவந்துள்ளது.


Kemalangan tragis di Lebuhraya Utara-Selatan berhampiran Jasin meragut nyawa seorang kanak-kanak perempuan berusia 12 tahun selepas tercampak keluar dari Toyota Vellfire. Tujuh lagi mangsa cedera manakala dua pemandu terselamat tanpa kecederaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *