சமூகவலைத்தலங்களில் போலியான 188,528 பதிவுகளை நீக்க MCMC உத்தரவு!

top-news

ஜூன் 28,


தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC சமூகவலைத்தலங்களில் 188,528 பதிவுகளைப் போலியானது என அடையாளம் கண்டிருப்பதாகவும் அதில் சட்டவிரோதமான 173,642 உள்ளடக்கங்களை நீக்கியிருப்பதாகவும் தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். சமூகவலைத்தலங்களின் மூலமாகப் பரப்பப்படும் பதிவுகளை MCMC முழுமையாக ஆராயும் என்றும் முக்கியமாகப் போலியான விளம்பரங்களை அடையாளம் கண்டு வருவதாக Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.

இது வரையில் 96,000 ஆன்லைன் சூதாட்டப் பதிவுகளை நீக்கியிருப்பதாகவும் 46,000க்கும் மேற்பட்ட போலி முதலீடுகள் குறித்தான மோசடி விளம்பரங்களையும் நீக்கியிருப்பதாகவும் அடுத்தகட்டமாக ஆபாசப் பதிவுகளைத் தாங்கியிருக்கும் பதிவுகளையும் நீக்கி வருவதாகவும் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். சமூவலைத்தலங்களில் பகிரப்படும் பதிவுகளை முழுமையாக நீக்க தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையத்திற்கு முழுமையான அதிகாரம் இல்லை என்றும் ஆனால் முக்கிய தரவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் இது சமூகவலைத்தலவாசிகளின் புகார்களின் எண்ணிக்கையிலானது என Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.


MCMC telah mengenal pasti 188,528 kandungan palsu di media sosial dan memadam 173,642 kandungan haram termasuk iklan penipuan, perjudian dalam talian dan pornografi. Datuk Fahmi Fadzil menegaskan usaha ini berdasarkan aduan pengguna dan kuasa kawalan terhad.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *