ஓட்டப்போட்டிகளில் இந்தியர்கள் மிளிர வேண்டும்- அமைச்சர் ஹன்னா இயோ!

- Muthu Kumar
- 09 Apr, 2025
(கு.தேவேந்திரன்)
கோலாலம்பூர், ஏப். 9-
நாட்டின் விளையாட்டுத் துறையில் இந்தியர்களின் பங்களிப்பு அளப்பரியதாகும். ஒவ்வோர் இனத்தவரும் தங்கள் விளையாட்டுகளில் தனித்திறமைகளுடன் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய மாணவர்களும் சிறந்து விளங்க வேண்டும் என்று இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கேட்டுக் கொண்டார்.
நேற்று கோலாலம்பூர் சிகாம்புட் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் ஜெட்ஸ் விளையாட்டு கிளப் ஏற்பாட்டில் அப்பள்ளியின் 50 மாணவர்களுக்கு விளையாட்டு ஊக்குவிப்பு நிதியும் பதக்கமும் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஹன்னா இயோ பேசினார்.
அமைச்சர் மேலும் பேசுகையில், மலாய்க்காரர்கள் அம்பு எய்தலிலும் சீனர்கள் நீச்சல் போட்டிகளிலும் சிறந்து விளங்குவது போல் இந்தியர்கள் ஓட்டப்பந்தயத்தில் தனித்திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர்.தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஓட்டப்பந்தயத்தில் சிறந்து விளங்க வேண்டும். எதிர்காலத்தில் நாட்டிற்கு தங்கப்பதக்கத்தை பெற்றுத் தர இதுபோன்ற போட்டிகளில் மாணவர்கள் பங்குபெற வேண்டும்.
மாணவர்கள் ஓட்டப்பந்தயத்தில் சிறந்து விளங்குவதற்கு அவர்களுக்குரிய பயிற்சிகளை ஜெட்ஸ் விளையாட்டு கிளப் வழங்கத் தயாராக இருக்கிறது. அதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்றார் அவர்.
சிகாம்புட் தமிழ்ப்பள்ளியின் மைதானத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுமட்டுமல்லாது. இந்தப்பள்ளியில் தடகளத்தை
அமைப்பதற்குரிய நடவடிக்கைகளும் ஏற்படுத்தப்படும்.மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விளையாட்டு ஊக்குவிப்பு நிதியை நல்ல வழியில் பயன்படுத்த கேட்டுக் கொண்ட அமைச்சர் ஹன்னா இயோ. விளையாட்டுச் சாதனங்களை வாங்குவதற்கு அந்த நிதியை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
விளையாட்டுத் துறையில் திறமையானவர்களை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் அரசாங்கம் 103 வகையான விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு 51 வகையான விளையாட்டுகள் இருந்தன. இந்த விளையாட்டுகளில் அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்.
இதனிடையே கபடி சிலம்பம் ஆகிய விளையாட்டுகள் சுக்மா போட்டிகளில் இடம்பெறுவதற்குரிய வாய்ப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் என்று கூறிய அமைச்சர் ஹன்னா இயோ, விளையாட்டுத் துறையை யொறுத்தவரை எல்லா இனத்தவர்களுக்கும் மடானி அரசாங்கம் பாகுபாடின்றி செயல்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சுரேஷ், தலைமையாசிரியர் திருமதி பிரேமா, ஜெட்ஸ் விளையாட்டு கிளப் தலைவர் எஸ். சிவப்பிரகாசம், டத்தோ புலேந்திரன் உள்ளிட்ட பெற்றோர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Menteri Belia dan Sukan, Hannah Yeoh, mengiktiraf sumbangan besar kaum India dalam sukan dan galakkan pelajar Tamil cemerlang dalam acara larian. Kerajaan sedia latihan, naik taraf padang dan kemudahan. Semua kaum diberi peluang saksama dalam pembangunan sukan negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *