கால்பந்து செய்தியாளர் சங்க விருது-மூன்றாம் முறை வென்றார் சாலா!

top-news
FREE WEBSITE AD

லண்டன், மே 25-

லிவர்பூலின் நட்சத்திரம் முஹமட் சாலாவை சிறந்த கால்பந்து ஆட்டக்காரராக FWA எனும் கால்பந்து செய்தியாளர் சங்கம் மூன்றாம் முறையாக தேர்வு செய்திருக்கின்றது.
அர்சனல் கிளப்பின் முன்னாள் விளையாட்டாளர் தியரி ஹென்றிக்குப் பிறகு, வரலாற்றில் மூன்று முறை இவ்விருதை வென்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை சாலா பெறுகின்றார்.

எகிப்து நாட்டைச் சேர்ந்த முஹமட் சாலா தற்போது இந்தப் பருவத்தில் 28 கோல்கள் அடித்து, பிரீமியர் லீக்கில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கின்றார்.2017-ஆம் ஆண்டில், இக்கிளப்பில் இணைந்தது முதல் லிவர்பூல் தனது இரண்டாவது லீக் பட்டத்தை வெல்வதற்கும் அவர் துணை புரிந்துள்ளார்.

இது தமக்கு மிகவும் அர்த்தமுள்ள விருதாக இருப்பதுடன். இது கிடைப்பது எளிதான ஒன்றல்ல எனவும் சாலா கூறியுள்ளார்.
இங்கிலாந்து பிரீமியர் லீக்கை வென்றது நிச்சயமாக அணியில் தாக்கத்தை  ஏற்படுத்தியது என்றும், டோட்டன்ஹாமை வீழ்த்தி லீக்கை வென்றபோது உணர்ந்த மகிழ்ச்சியைப் போல இதற்கு முன்பு உணர்ந்ததில்லை என்றும் சாலா விளக்கினார்.

FWA விருது பட்டியல் வாக்களிப்பில்,
லிவர்பூலின் விர்ஜில் வான் டிஜ்க் இரண்டாவது இடத்தைப் பிடித்த வேளையில், அடுத்த இரு இடங்களில் நியூகாஸ்டலின் அலெக்சாண்டர் ஐசக் மற்றும் அர்சனலின் டெக்லான் ரைஸ் ஆகியோர் உள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *