பக்காத்தானில் அமைச்சராகும் தகுதியில் யாருமே இல்லை! – பாஸ் கட்சி சாடல்!

- Sangeetha K Loganathan
- 28 Jun, 2025
ஜூன் 28,
பக்காத்தானில் தகுதியான அரசியல்வாதிகள் இல்லை என்பதால் கட்சியின் உறுப்பினர் இல்லாத Datuk Seri Amir Hamzah இரண்டாவது நிதியமைச்சராகவும் தற்போது பொருளாதார அமைச்சராகவும் பொறுப்பேற்கிறார் என பாஸ் கட்சியின் Bachok நாடாளுமன்ற உறுப்பினர் Syahir Sulaiman சாடினார். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத்திறன் இருக்க வேண்டும். அப்படி நிர்வாகத் திறன் இல்லாதவர்கள் பக்காத்தானில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதால் திறமையான அமைச்சரைப் பக்காத்தானில் அடையாளம் காண முடியாமல் Datuk Seri Amir Hamzah போன்றவர்களை அமைச்சராக நியமித்திருப்பதாக Syahir Sulaiman குறிப்பிட்டார்.
Datuk Seri Amir Hamzah திறமையான நிர்வாகி என்பதில் எந்த கேள்வியும் இல்லை. அவருக்கு நிர்வாகத்திறன் அதிகம் என்றாலும் பொருளாதார அமைச்சராகும் அளவிற்குப் பக்காத்தானில் யாருமே இல்லையா எனும் கேள்வியை Syahir Sulaiman முன்வைத்துள்ளார். RMK 13 எனும் 13 ஆவது தேசிய வரைவுத் திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை என அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்திருக்கிறார். அப்படியானால் பொருளாதார முன்னாள் அமைச்சர் Datuk Seri Rafizi Ramli முழுமையாக தனது அமைச்சர் கடமையை நிறைவேற்றாமலே அரைகுறையாக விலகினாரா எனும் கேள்வியும் எழுகிறது என Bachok நாடாளுமன்ற உறுப்பினர் Syahir Sulaiman தெரிவித்தார்.
Ahli Parlimen Bachok, Syahir Sulaiman (PAS) mendakwa Pakatan Harapan gagal melahirkan pemimpin berkelayakan sehingga terpaksa melantik Datuk Seri Amir Hamzah bukan ahli parti sebagai Menteri Ekonomi dan Timbalan Menteri Kewangan kedua untuk menerajui RMK13.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *