அமைச்சரவையின் முடிவை ஏற்பது RAFIZI-க்கு நல்லது! FAHMI வலியுறுத்து!

top-news

ஜூன் 28,


RMK 13 எனும் 13 ஆவது தேசிய வரைவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து முன்னமே அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சரவை ஒப்புதலுடன் RMK 13 எனும் 13 ஆவது தேசிய வரைவுத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாகவும் தொடர்புத் துறை அமைச்சர் Datuk Fahmi Fadzil இன்று தெரிவித்தார். முன்னாள் பொருளாதாரத் துறை அமைச்சர் Datuk Seri Rafizi Ramli அமைச்சரவையின் கருத்துகளை மதிப்பார் என தாம் நம்புவதாகவும் Datuk Fahmi Fadzil தெரிவித்தார். அவர் பொருளாதாரத் துறை அமைச்சராக இருந்த போது உருவாக்கப்பட்ட RMK 13 திட்டத்தின் செயல்பாடுகளை மட்டுமே மீளாக்கம் செய்யப்படுகிறது என Datuk Fahmi Fadzil விளக்கமளித்தார்.

RMK 13 திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியது பொருளாதார அமைச்சு. இப்போது Datuk Seri Rafizi Ramli பொருளாதாரத் துறை அமைச்சராக இல்லாத போது அவர் செயல்படுத்த முடியாது. ஆகையால் புதிய பொருளாதார அமைச்சருக்கு ஏற்ப அதன் செயல்பாடுகளையும் முன்னெடுப்புகளையும் மாற்றியமைப்பதாகவும் திட்டங்களில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என்றும் Datuk Fahmi Fadzil விளக்கமளித்தார். இது தொடர்பாக அமைச்சரவையில் பலகட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் மாற்றத்தால் இந்த மாற்றங்கள் செய்யப்படுவதை அமைச்சரவை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக Datuk Fahmi Fadzil விளக்கமளித்தார்.


Menteri Komunikasi, Datuk Fahmi Fadzil menegaskan pindaan terhadap RMK13 telah dibincangkan dan dipersetujui kabinet. Beliau yakin Rafizi akan menghormati keputusan kabinet kerana perubahan hanya melibatkan pelaksanaan bukan kandungan dasar yang telah dirancang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *