புதிய தவணையில் சிலாங்கூர் எஃப்.சி.குழுவுக்கு வெ.1 கோடி மானியம்-மாநில அரசு வழங்குகிறது!

- Muthu Kumar
- 12 Jun, 2025
ஷா ஆலம், ஜூன் 12-
எதிர்வரும் 2025/2026 மலேசியா லீக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு சிலாங்கூர் எஃப்.சி. அணிக்கு மாநில அரசு சார்பாக ஒரு கோடி வெள்ளி நிதி தொடர்ந்து வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இந்த நிதி எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் கழகம் மற்றும் சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகம் (பி.கே.என்.எஸ்.) ஆகியவற்றின் பங்களிப்பு வழி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அந்த பட்ஜெட் அப்படியே உள்ளது. எம்.பி.ஐ. மற்றும் பி.கே.என்.எஸ். போன்ற துணை நிறுவனங்கள் அந்த ரெட் ஜெயண்ட் குழுவில் பங்குதாரர்களாக உள்ளன.மாநில அரசாங்கத்தின் சார்பில் முந்தைய ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் நாங்கள் தொடர்ந்து 1 கோடி வெள்ளியை ஒதுக்குவோம் என்று நேற்று சுல்தான் அப்துல் அஜீஸ் கட்டிடத்தில் நடைபெற்ற 2024 சிலாங்கூர் மாநில விளையாட்டு விருதுகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
விளையாட்டாளர்கள் தேர்வில், குறிப்பாக வெளிநாட்டினரை தருவிப்பதில் முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். இந்த சீசனில் குறைந்தபட்சம் ஒரு கிண்ணத்தையாவது வெல்வதை நாம் இலக்காகக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.கடந்த தவணையின் போது சிலாங்கூர் எஃப்.சி. சூப்பர் லீக்கில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இது அவர்களுக்கு ஏ.எஃப்.சி. சாம்பியன்ஸ் லீக்கில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது.
Kerajaan negeri Selangor akan terus menyalurkan dana RM1 juta kepada pasukan Selangor FC bagi persediaan Liga Malaysia 2025/2026. Dana ini disumbang melalui MPI dan PKNS. Selangor FC disasar menang sekurang-kurangnya satu piala musim ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *