பினாங்கில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் சுபாஷினி சாம்பியன் பட்டம் !

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

பினாங்கு,ஏப். 23-

கெடா மாநிலம், குவால மூடாவைச் சேர்ந்த குருமு தாய் தற்காப்பு சங்கத்தை பிரதிநிதித்த 19 வயதான இந்திய மாணவி எஸ். சுபாஷினி, பினாங்கில் அண்மையில் நடைபெற்ற மலேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அவர். இதற்கு முன்பு இந்தியாவில் நடைபெற்ற அனைத்துலக குத்துச்சண்டை போட்டியிலும் வெற்றி பெற்று, நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான வெற்றிகளைப் பதிவு செய்து வரும் சுபாஷினி. தற்போது மலேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்றாம் நிலை பெறும் சாதனையை உருவாக்கியுள்ளார்.




இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கெடா குருமு முவா தாய் தற்காப்பு சங்கத்தின் முதன்மை பயிற்றுவிப்பாளர் மாஸ்டர் பிரகாஷ் நாயுடு, "எஸ். சுபாஷினி, மலேசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டத்தை உறுதியாக வெல்வார் என நம்பிக்கை இருக்கிறது. "என கூறினார்.கெடா மாநிலத்தில் குவால மூடா குருமு முவா தாய் தற்காப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் மே மாதம் இந்த மலேசிய சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இத்தகைய வெற்றிகள், இளைஞர்களுக்கிடையே தற்காப்பு கலைகளின் மீது ஆர்வத்தையும், நாட்டுப்பற்றையும் ஊக்குவிக்கக்கூடியவை என்று சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

Subashini, 19 tahun dari Kedah, menjuarai Kejohanan Tinju Malaysia. Beliau pernah menang dalam kejohanan antarabangsa di India. Kejayaan ini membanggakan negara dan mendorong minat belia terhadap seni mempertahankan diri serta semangat patriotisme dalam kalangan masyarakat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *