குறுக்கோட்டப்போட்டியில் கூலிம் தமிழ்ப்பள்ளி சுழற்கிண்ணத்தை வென்று சாதனை!

top-news
FREE WEBSITE AD

(கே. ஆர். மூர்த்தி)

கூலிம்,ஏப்.16-

கூலிம் பண்டார் பாரு மாவட்ட நிலையில் நடைபெற்ற குறுக்கோட்டப் போட்டியில் 82 மூவின ஆரம்பப் பள்ளிகளிலிருந்து 320 மாணவ-மாணவியர்கள் கலந்துகொண்டதாக கூலிம் பண்டார் பாரு மாவட்ட குறுக்கோட்டப் போட்டியின் தொழில்நுட்ப அதிகாரி எம். இராமச்சந்திரன் தெரிவித்தார்.இந்த குறுக்கோட்டப் போட்டி கூலிம் பட்டணத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள லாபு பெசார் இடைநிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது.

இப்போட்டி லாபு பெசார் இடைநிலைப்பள்ளியின் ஏற்பாட்டில் கூலிம் பண்டார் பாரு மாவட்ட கல்வி இலாகாவின் முழு ஆதரவோடு பள்ளியின் மைதானத்தில் நடைபெற்றது.இந்த குறுக்கோட்டப் போட்டியில் கூலிம் பண்டார் பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளிகளான தமிழ், மலாய், சீனப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு என்று இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டது.

கூலிம் பண்டார் பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள 18 தமிழ்ப்பள்ளிகளில்
இப்போட்டி அந்தந்த பள்ளி அளவில் நடத்தப்பட்டு, அதில் ஆண்கள் பிரிவில் மூவரும் பெண்கள் மூவரும் தேர்வு செய்து மாவட்ட நிலை மாவட்ட நிலையில் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள்.கூலிம் பண்டார் பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ், மலாய் மற்றும் சீனம் ஆகிய 82 ஆரம்பப் பள்ளிகளிலிருந்து ஆண்கள் பிரிவில் 160 மாணவர்களும் பெண்கள் பிரிவில் 160 மாணவிகளும் பங்கு பெற்றார்கள்.

அந்தவகையில் ஆண்கள் பிரிவில் முதல் நிலையில் பாடாங் செராய் தாமான் ரியா மலாய் பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஹாடாம் டர்வீஸ், இரண்டாம் நிலையில் கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் என். ஹாரிஷ் ரேஹான் மற்றும் மூன்றாம் நிலையில் பாடாங் செராய் தாமான் மாசூரி மலாய் பள்ளியைச் சேர்ந்த மாணவன் முகமட் அம்ஸ்யார் வெற்றி பெற்றனர். நான்காம் நிலையில் செர்பாங் தெராப் மலாய் பள்ளியைச் சேர்ந்த மாணவன் முகமட் ஆல் பாத்தே மற்றும் ஐந்தாம் நிலையில் தாமான் ஹைடெக் மலாய் பள்ளியைச் சேர்ந்த மாணவன் முகமட் ராயான் டர்வீஸ் வெற்றி பெற்றனர்.

பெண்கள் பிரிவில் மாணவி இராஷினி சண்முகநாயுடு முதல் நிலையில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். பாடாங் செராய் விக்டோரியா தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி தேஜாஸ்ரீ கணேசன் இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றார்.

மூன்றாம் நிலையில் கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி பிரியா போக்கீர்தானன் வெற்றி பெற்றார். நான்காம் நிலையில் சுங்கை செலுவாங் மலாய் பள்ளியைச் சேர்ந்த மாணவி நூர் அல்லினா மற்றும் ஐந்தாம் நிலையில் கூலிம் செயிண்ட் அன்ஸ் கான்வெண்ட் பள்ளியைச் சேர்ந்த மாணவி சரண்யா ருத்திரன் வெற்றி பெற்றார்.

போட்டியில் பங்கு பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்ற ஆண்கள் பிரிவில் 15 பேருக்கும் பெண்கள் பிரிவில் 15 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இவர்களில் முதல் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம். பரிசு பதக்கங்கள் வழங்கப்பட்டன. மற்றும் பதக்கங்கள் கூலிம் பண்டார் பாரு மாவட்ட நிலையில் நடைபெற்ற குறுக்கோட்டப்போட்டி 2025 கூலிம் தமிழ்ப்பள்ளி அதிக புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவுக்கான சுழற்கிண்ணத்தையும் பெண்கள் பிரிவுக்கான சுழற்கிண்ணத்தையும் வென்றது.

மாவட்ட நிலையில் வெற்றி பெற்ற முதல் ஐவர் மாநில அளவில் நடத்தப்படும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இம்முறை மாநில அளவில் இப்போட்டி லங்காவி தீவில் நடைபெறவுள்ளதாக கூலிம் தமிழ்ப்பள்ளியின் மாணவர் நல துணைத்தலைமையாசிரியரும் பயிற்றுநருமான எம். இராமச்சந்திரன் தெரிவித்தார். மாவட்ட நிலையில் நடத்தப்பட்ட இந்த குறுக்கோட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவிலும் பெண்கள் பிரிவிலும் அதிக புள்ளிகளை பெற்று வெற்றியை நிலைநாட்டி சாதனை படைத்து சுழற்கிண்ணத்தை வென்ற கூலிம் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் ஜூலியானா பெரியநாயகம் வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.

Sebanyak 320 murid dari 82 sekolah rendah pelbagai aliran menyertai pertandingan merentas desa peringkat daerah Kulim Bandar Baharu. Murid dari Sekolah Tamil Kulim memenangi kejuaraan keseluruhan lelaki dan perempuan serta melayakkan diri ke peringkat negeri di Langkawi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *