மலேசிய கோப்பையை வென்றது JDT- ஒரே சீசனில் 3 கோப்பைகள் வென்று அசத்தல்!

- Muthu Kumar
- 27 Apr, 2025
கோலாலம்பூர்: நேற்று இரவு புக்கிட் ஜலீலில் தேசிய மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீ பஹாங் எஃப்சி மற்றும் Johor Darul Ta’zim ஆகிய அணிகளுக்கு இடையிலான மலேசிய கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் Johor Darul Ta’zim அணி, ஸ்ரீ பஹாங் எஃப்சியை வீழ்த்தி மலேசிய கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இந்த வெற்றியின் மூலம் Johor Darul Ta’zim அணி நாட்டின் மூன்று முக்கிய கால்பந்து பட்டங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது. சூப்பர் லீக், எஃப்ஏ கோப்பை மற்றும் மலேசிய கோப்பை என ஒரே சீசனில் மூன்று வெற்றிகளைக் குவித்து அசத்தியுள்ளது.
தெற்கு டைகர்ஸ் அணியின் ஸ்ட்ரைக்கர்களான பெர்க்சன் டா சில்வா மற்றும் அரிஃப் ஐமன் முகமட் ஹனாபி ஆகியோர் இரண்டாவது பாதியில் கோல் அடித்து, முதல் பாதியின் தொடக்கத்தில் டி சரவணன் அடித்த ஸ்ரீ பஹாங்கின் ஆரம்ப கோலை முறியடித்தனர்.
35வது நிமிடத்தில் செர்ஜியோ அகுவேரோ இரண்டாவது மஞ்சள் அட்டையைப் பெற்ற பிறகு கார்டு மூலம் வெளியேற்றப்பட்டதால், ஸ்ரீ பஹாங்கின் அதிர்ஷ்டம் குறையத் தொடங்கியது.ஆட்டத்தின் 73 வது நிமிடத்தில் ஆரிஃப் ஐமான் வெற்றி கோலை அடித்தார்.இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் JDT கோப்பையைக் கைப்பற்றியது.
Johor Darul Ta'zim (JDT) menewaskan Sri Pahang FC 2-1 di final Piala Malaysia di Bukit Jalil. JDT mencipta sejarah memenangi Liga Super, Piala FA dan Piala Malaysia dalam satu musim. Gol kemenangan dijaringkan oleh Bergson da Silva dan Arif Aiman Hanapi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *