போதைப்பொருளுடன் 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது!

- Thina S
- 21 Jul, 2025
ஜூலை 21,
நள்ளிரவுகளில் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த கேளிக்கை மையத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 38 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியாருக்குச் சொந்தமான சொகுசு வீட்டில் ஒவ்வொரு வாரமும் PRIVATE PARTY நடத்தப்படுவதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சுபாங்கில் உள்ள தனியார் சொகுசு வீட்டில் நள்ளிரவு 12.30 மணிக்கு இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட
38 பேரில் 13 பேர் வெளிநாட்டினர்கள் என்றும் 25 பேர் 18 முதல் 25 வயதுக்குற்பட்ட பல்கலைக்கழக
மாணவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார். சொகுசு பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 6.5 கிராம் ganja, 1.7 கிராம் ketamine வகை போதைப்பொருள்
பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யட்ட 38 பேரில் 12 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பதாகச்
சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்டக் காவல் ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *