அரசாங்கத்தின் அறிவிப்பில் M 40 தரப்பும் பயன்பெறும்! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 24: வாழ்க்கைச் செலவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க முயற்சிகளிலிருந்து M40 குழுவும் பயனடைகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், RON95 எரிபொருள் விலையைக்  குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் 10 நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டண உயர்வுகளை ஒத்திவைத்தல் போன்ற முயற்சிகள் M40 தரப்பினருக்கும் பயனாக இருக்கும் என்றார்.

 இன்று  அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசிய அவர், அடிக்கடி வாகனங்கள் மற்றும் சுங்கச் சாலைகளைப் பயன்படுத்துகிறவர்கள் M 40 தரப்பினர் என்று சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *