TURUN ANWAR பேரணி அமைதியான முறையில் நடக்கட்டும்! - தேசிய காவல் படைத் தலைவர் அறிவுறுத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 25: நாளை நடைபெறும் தூருன் அன்வார் பேரணியில் கலந்து கொள்ளத் திட்டமிடுபவர்கள் சட்டத்தைக் கடைப்பிடித்து அமைதியான முறையில் கூட வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பேரணியில் கலந்துகொள்பவர்களும் மரியாதையுடன் நடந்துகொள்வார்கள், அவர்களின் வார்த்தைகளைக் கவனத்தில் கொள்வார்கள் என்று தாம் நம்புவதாக  காவல்துறைத் தலைவர் காலிட் இஸ்மாயில் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பேரணி அமைதியாக நடைபெறுவதை உறுதிசெய்ய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் தாங்கள் பாராட்டுவதாகவும், கூட்டத்தை எளிதாக்க காவல்துறை அங்கு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சிறிது நெரிசல் எதிர்பார்க்கப்படுவதால், தாமதங்கள் அல்லது சிரமங்களைத் தவிர்க்க, எந்தவொரு பயணத்தையும் முன்கூட்டியே திட்டமிடுமாறும் காலிட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

அன்வாரின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்துவதற்காக பெரிகாத்தான் நேஷனல் இந்த பேரணியைத் திட்டமிட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் ஷா ஆலமில் நடந்த இதேபோன்ற போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட போதிலும், நாளைய பேரணியில் 300,000 பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *