பத்து பூத்தே பிரச்சினையில் சபையைத் தவறாக வழிநடத்துவதா? அன்வாருக்கு எதிராகத் தீர்மானம்!

- Shan Siva
- 24 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 24: பத்து பூத்தே பிரச்சினையில் சபையைத் தவறாக வழிநடத்தியதாக பிரதமர் அன்வர் இப்ராஹிமை மக்களவையின் உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவிற்கு பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி ஒரு தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது.
சபையை தவறாக
வழிநடத்துவது தொடர்பான நிலை ஆணை 36(12) இன் கீழ் இன்று காலை மக்களவை சபாநாயகர்
ஜோஹாரி அப்துல்லாவுக்கு இந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதாக தக்கியுதீன் ஹசான் கூறினார்.
பத்து பூத்தே
வழக்கில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவின் பங்களிப்பு தொடர்பாக
அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு
செய்துள்ளதாக அன்வார் மக்களவைக்கு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரச்சினையில்
மகாதிர் மீது வழக்குத் தொடரும் அதிகாரம் சட்டத்துறை தலைவருக்கு அல்ல, மாறாக பிரதமருக்கும் அவரது அமைச்சரவைக்கும்
உள்ளது என்று மறைமுகமாகக் கூறி அன்வார் மக்களவையை தவறாக வழிநடத்தியதாக
எதிர்க்கட்சித் தலைமை கொறடாவான தக்கியுதீன் கூறினார்.
பிரதமர் சட்ட
விஷயங்களில் தலையிடுகிறார், நீதிமன்றங்களையும்,
சட்டத்துறை தலைவரின் அதிகாரங்களையும் கூட மீறி
செயல்படுகிறார் என்பதை இது குறிக்கிறதா?" என்று தக்கியுதீன், மற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் ஒரு செய்தியாளர்
கூட்டத்தில் கேள்வி எழுபினார்.
கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 145(3) இல் கூறப்பட்டுள்ளபடி, வழக்குத் தொடருவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சட்டத்துறை தலைவரிடம் உள்ளது என்றும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *