PN - BN கூட்டணி டைட்டானிக் போல் கவிழ்ந்துவிடும்! - ஹன்னா யியோ
- Shan Siva
- 24 Jul, 2026
கோலாலம்பூர், ஜூலை 24: நெகிரி செம்பிலான் தேர்தலுக்காக பாரிசான் நேஷனல் மற்றும் பெரிகாத்தான் நேஷனல் இடையே ஏற்பட்டுள்ள கூட்டணியை DAP துணைப் பொதுச்செயலாளர் ஹன்னா யியோ விமர்சித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இறுதியில் டைட்டானிக் கப்பலைப் போல மூழ்கிவிடும் என்றும் அவர் கணித்துள்ளார்.
BN-PN கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்றும், அதனால் பக்காத்தான் ஹரப்பான் ஆதரவாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் யோ கூறினார்.
இந்த ஒத்துழைப்பு, துரோகத்தாலும் அரசியல் நட்புகளுக்கு விசுவாசமற்றவர்களாலும் களங்கப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சருமான அவர் மேலும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



