நான் இன்னும் ஏழையாகவே உள்ளேன்! - ரஃபிஸி ரம்லி
- Shan Siva
- 13 Feb, 2026
அம்பாங், பிப் 13: இங்கிலாந்தை தளமாகக் கொண்ட குறைக்கடத்தி நிறுவனமான ARM ஹோல்டிங்ஸுடனான அரசாங்க ஒப்பந்தத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளும் அறிக்கையைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தனது வீட்டை சோதனை செய்யப்போவதாக தனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொருளாதாரத்துறை முன்னாள் அமைச்சர் ரஃபிஸி ராம்லி தெரிவித்துளர்.
அரசாங்கத்தை விமர்சித்து வரும் ரஃபிஸி, இதுபோன்ற மிரட்டல் தந்திரங்களால் தாம் கலங்கவில்லை கூறினார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில் தாம் அனுபவம் வாய்ந்தவன். முந்தைய ஆட்சியில் இதுபோன்ற தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டன, அவை ஒருபோதும் பலனளிக்கவில்லை என்று கூறினார்.
எனவே விரைவில் நடக்கவிருக்கும் சோதனையைக் கருத்தில் கொண்டு வீட்டைச் சிறிது சுத்தம் செய்ய தனது மனைவியிடம் சொன்னேன் என்று அவர் இங்கு ஒரு செய்தியாளர் கூட்டத்தில் நக்கலாகக் கூறினார்.
நேற்று இரவு, ARM ஹோல்டிங்ஸ் ஒப்பந்தம் தொடர்பாக தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட MACC அறிக்கையை ரஃபிஸி சுட்டிக்காட்டினார்.
அவர்கள் விரும்பும் அனைத்தையும் தோண்டி எடுக்கலாம். எனக்கு மதிய உணவு அல்லது நினைவுப் பொருட்கள் கூட கிடைக்கவில்லை, லஞ்சம் ஒருபுறம் இருக்கட்டும். நான் இன்னும் முன்பு போலவே ஏழையாக இருக்கிறேன். எனக்கு மில்லியன் கணக்கான பங்குகள் இல்லை என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



