பெர்சாத்து விவகாரம்... நாங்கள் விலகியே நிற்கிறோம்! – பாஸ்
- Shan Siva
- 14 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 14: 17 தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பெர்சாத்துவில் உள்ள எந்தவொரு பிரிவுடனும் பாஸ் கூட்டணி வைத்துள்ளதாக எழுந்த ஊகங்களை பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுதீன் ஹசான் நிராகரித்துள்ளார்.
பெர்சாத்துவின்
உள் நெருக்கடியில் இருந்து பாஸ் விலகி இருப்பதாக தக்கியுதீன் தெரிவித்துள்ளார்.
பாஸ் தற்போது பெர்சாத்து
முன்னாள் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடின் அல்லது அவரது பிரிவை ஆதரிப்பதாக யாராவது
கூறினால், அது உண்மையல்ல,
ஏனெனில் நாங்கள் ஒரு பக்கத்தை எடுக்கவில்லை என்று
அவர் தெரிவித்தார்.
பெர்சாத்துவில்
மட்டுமல்ல, பெரிகாத்தான்
நேஷனலுக்குள் உள்ள மற்ற கட்சிகளிலும் நாங்கள் தலையிடுவதில்லை. எங்கள் சொந்தக்
கட்சியை நிர்வகிப்பதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் கூறினார்.
கட்சியில்
இருந்து நீக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, திரெங்கானுவின் மராங்கில் உள்ள மஸ்ஜித்
ருசிலாவில் பாஸ் தலைவர்களைச் சந்திக்கும் புகைப்படத்தை ஹம்சா நேற்று
வெளியிட்டிருந்தார்.
அவர் பாஸ் தலைவர்
அப்துல் ஹாடி அவாங், உதவித் தலைவர்
அஹ்மத் சம்சூரி மொக்தார், தகியுதீன்
மற்றும் உதவி பொதுச்செயலாளர் சியாஹிர் சுலைமான் மற்றும் பெர்சாத்து துணைத் தலைவர்
ரொனால்ட் கியாண்டி மற்றும் முன்னாள் பெர்சாத்து தலைவர்கள் சைபுடின் அப்துல்லா
மற்றும் வான் சைபுல் வான் ஜான் ஆகியோருடன் காணப்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



