நீரில் மூழ்கி உயிரிழந்த இரு மாணவர்கள்! கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்! அமைச்சர் உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 08 Apr, 2026
ஏப்ரல் 8,
பெர்லிஸ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் இருவர் சுற்றுலாவின் போது கோலா மூடா ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையின் முழுமையான விசாரணைக்குக் கல்வி அமைச்சு பொறுப்பேற்கும் என கல்வி அமைச்சர் FADHLINA SIDEK உறுதியளித்தார். உயிரிழந்த 21 வயதான Christoper Ling Jia Siang, Joey Ling Lin Siang இருவரும் 33 மாணவர்களுடன் பயிற்சியில் இருந்த போது நீரில் மூழ்கியதாகவும் சுமார் 1 மணி நேரத் தேடுதலுக்குப் பின்னர் இருவரின் உடலும் சடலமாக மீட்கப்பட்டதாகவும் கோலா மூடா மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
கல்லூரியின் பயிற்சியின் போது அவர்கள் நீரில் மூழ்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாகவும் அவர்களின் குடும்பத்தினருக்குக் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். காவல்துறையின் விசாரணைக்கு மாநிலக் கல்வி இலாகாவும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றும் இரு மாணவர்களின் உயிரிழப்பிற்குக் கல்வி அமைச்சு பொறுப்பேற்பதாகவும் கல்வி அமைச்சர் FADHLINA SIDEK தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



