ஜம்ரிக்கு போலீஸ் காவலில் சிறப்புச் சலுகையா?! நாடாளுமன்றத்தில் காரசார விவாதம்
- Shan Siva
- 10 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 10: சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜம்ரி வினோத் கைது செய்யப்பட்ட பின், போலீஸ் காவலில் அவருக்கு “சிறப்பு சலுகை” வழங்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படங்கள் குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் மறுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த விவகாரத்தை இரு விதமாகப் புரிந்து கொள்ளலாம் என்றார்.
ஒருபுறம், கைதிக்கு உணவும் குடிநீரும் வழங்கப்பட்டதைப் பார்த்து, போலீஸ் கடுமையாக நடக்கவில்லை என்று சிலர் நினைக்கலாம். மறுபுறம், கைதிக்கு முன்னுரிமை சலுகை வழங்கப்பட்டதாகவும் சிலர் கருதலாம் என அவர் விளக்கினார். இதைக் காணும் பார்வையைப் பொறுத்தே முடிவு மாறும். அதனால் இந்த விவகாரத்தில் தாம் இறங்க விரும்பவில்லைஎன்று தனது அமைச்சகத்துக்கான அரசரின் உரை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும்போது சைஃபுதீன் கூறினார்.
PH கிள்ளான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் . கணபதிராவ், சனிக்கிழமை கைது செய்யப்பட்ட ஜம்ரிவினோத்திற்கு காவலில் மேசையில் வைத்து உணவு வழங்கப்பட்டதாகத் தோன்றுவதாக குறிப்பிட்டிருந்தார்.
நான் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளேன். ஒருபோதும் எனக்கு மேசையில் வைத்து உணவு வழங்கப்படவில்லை. அமைச்சர் அவர்களும் கைது செய்யப்பட்டபோது இப்படிப் பரிமாறப்படவில்லை என நினைக்கிறேன் என்று கணபதிராவ் கூறினார்.
ஜம்ரி வினோத் மற்றும் மேலும் 18 பேர், ‘சட்டவிரோத வழிபாட்டு தலங்கள்’ என கூறி நடத்த திட்டமிடப்பட்ட போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர். அந்த போராட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
போலீசார், ஜம்ரி மற்றும் ஒரு இணை ஒருங்கிணைப்பாளர் மீது தேசத் துரோகச் சட்டம், பயத்தை ஏற்படுத்தும் நோக்கில் அறிக்கைகள் பரப்புதல், மற்றும் தொடர்பு வலையமைப்புகளை தவறாக பயன்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்1
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



