மதிப்புகளை நினைவூட்டும் பொங்கல்! - அன்வார்
- Shan Siva
- 14 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 16: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மலேசியாவில் வாழும் தமிழ்ச் சமூகத்தினருக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டின்
பொங்கல் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் குடும்பத்தினருடனும்
அன்புக்குரியவர்களுடனும் அர்த்தமுள்ள தருணங்களால் நிறைந்ததாக இருக்க வேண்டும் என அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
மேலும், இந்த விழா நன்றியுணர்வு, ஒன்றுபட்ட தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை போன்ற மதிப்புகளை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நமது பார்வைகள், பின்னணிகள் அல்லது நம்பிக்கைகள்
வேறுபட்டிருந்தாலும், புரிதலும்
மரியாதையும் தான் ஒற்றுமையான, ஒருங்கிணைந்த
நாட்டின் அடிப்படை என்று அவர் தெரிவித்துள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



