PN தலைவர் ஆகிறாரா மகாதிர்?! - தீயாய் பரவும் செய்தி
- Shan Siva
- 31 Dec, 2025
கோலாலம்பூர், டிச 31: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமத் Perikatan Nasional தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று பரவும் செய்தி தவறான செய்தி என்று பெஜுவாங் தெரிவித்துள்ளது.
PN தலைவராக மகாதிர் நியமிக்கப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல என்று Pejuang தகவல் பிரிவுத் தலைவர் ரஃபிக் ரஷித் அலி தெரிவித்தார்.
எங்கள் கூட்டாண்மையின் கருத்தை புறக்கணிக்கும் தனக்கே உரிய அரசியல் முடிவுகளை எடுக்கமாட்டோம். மகாதிர் எந்த அரசியல் கூட்டமைப்புக்கும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்படவில்லை, அவர் இதற்கு ஒப்புதல் வழங்கியதுமில்லை என்று அவர் தெரிவித்தார்
அரசியல் பிளவுகள் தொடர்ச்சியான அரசியல் கோளாறை உருவாக்கும், இது பொருளாதாரத்தையும், ஜனநாயகத்திற்கான மக்கள் நம்பிக்கையையும் பாதிக்கும் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



