வீட்டிலிருந்து வேலை - தனியார் நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! - பிரதமர் வேண்டுகோள்
- Shan Siva
- 24 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 24: பொதுத்துறையில் நடைமுறையில் உள்ளதைப் போன்றே,
வீட்டிலிருந்து வேலை செய்வது (WFH) உள்ளிட்ட நெகிழ்வான பணி ஏற்பாடுகளைச்
செயல்படுத்துவதைக் கருத்தில் கொள்ளுமாறு தனியார் துறைக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
நிதி
அமைச்சராகவும் இருக்கும் அன்வார், இந்த நடவடிக்கை
எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும், செலவு
அழுத்தங்களைத் தணிக்கவும், பணியாளர்களின்
உற்பத்தித்திறனையும் மன உறுதியையும் பராமரிக்கவும் உதவும் என்று கூறினார்.
மாறியுள்ள உலகில்,
தனியார் துறை பழைய முறைகளுடன் திருப்தியாக
இருக்க முடியாது. மாறாக, உற்பத்தித்திறன்
மேம்பாடுகளைத் துரிதப்படுத்தவும், புத்தாக்கம்
மற்றும் தானியக்கமயமாக்கலில் முதலீட்டை அதிகரிக்கவும், மதிப்புக்கூட்டலையும் நிலைத்தன்மையையும் உருவாக்கவும் இதுவே
சரியான நேரம் என்று அவர்
கூறினார்.
நாட்டின் நிலையை
உயர்த்துவதற்காக, அரசாங்கம் மதானி
பொருளாதாரக் கட்டமைப்பையும் தெளிவான கொள்கைகளையும் வழங்கியுள்ளது என்றும், எனவே, இந்தச் சீர்திருத்தங்களால் உருவாக்கப்பட்ட இடத்தையும் வாய்ப்புகளையும் தனியார்
துறை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
இந்த சவாலான
காலங்களில், ஒட்டுமொத்த
அரசாங்க அமைப்பும் ஆளுகையை வலுப்படுத்த வேண்டும், ஒவ்வொரு ரிங்கிட்டும் விவேகத்துடன் செலவிடப்பட வேண்டும்,
கசிவுகள் சரிசெய்யப்பட வேண்டும், மேலும் வருவாய் ஆதாரத்தை விரிவுபடுத்தவும்,
விதிமுறைகளுக்கு இணங்குவதை மேம்படுத்தவும்
மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



