முகைதீன் ஏன் பயப்படுகிறார்?! இது குழந்தைத்தனமானது! - ஹம்சா பதிலடி
- Shan Siva
- 06 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 6: அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidiயைச் சந்தித்தது கட்சிக்கு துரோகம் என கூறிய Muhyiddin Yassin குற்றச்சாட்டை பெர்சாத்து முன்னாள் துணைத் தலைவரான Hamzah Zainudin மறுத்துள்ளார்.அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அவர் கூறினார்.
நான் எதிர்க்கட்சித் தலைவர். அப்படியிருக்கையில் டிஏபி
பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கை சந்திக்க கூடாதா? நான் எதிர்க்கட்சித் தலைவர்;
அவர் அமைச்சர்
என்று ஹம்சா சுட்டிக்காட்டினார்.
அதேபோல், துணைப் பிரதமரான ஜாஹிட்டை நான் சந்திக்க கூடாதா? முகைதீன் ஏன்
பயப்படுகிறார்? ஜாஹிட் வந்து அவரை கட்சித்
தலைவர் பதவியில் இருந்து அகற்றவா முடியும்? என ஹம்ஸா கேள்வி எழுப்பினார்.
நான் துரோகம் செய்தேன் என்று கூறுவது, என்னை
கட்சியில் இருந்து நீக்குவதற்கான காரணம் தேடுவதற்காக மட்டுமே. இதை இவ்வளவு
நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. இது குழந்தைத்தனமானது என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
முன்னதாக, ஹம்சா ஜாஹிட்டுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி புதிய
அரசியல் கூட்டணியை உருவாக்க முயன்றதாக முகைதீன் குற்றம் சாட்டியிருந்தார். அதன்படி,
அந்த அமைப்பில்
ஹம்சா துணைப் பிரதமராகவும் மற்றொரு தலைவர் பிரதமராகவும் பதவி ஏற்கும் திட்டம்
இருந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும், பெர்சாத்து கட்சியை நிலைகுலையச் செய்யவும், உட்பகையை
ஏற்படுத்தவும் ஹம்சா நடவடிக்கைகள் எடுத்ததாகவும், அதனால் தான் கடந்த பிப்ரவரி
13 அன்று அவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் முகைதீன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதிய அரசியல் முன்னேற்றமாக Parti
Keluarga Malaysia கட்சியில் சேர்ந்து அதன் தலைமையை ஏற்கும் வாய்ப்பு குறித்து
ஹம்சா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



