மக்கள் உங்களைத்தான் நிராகரித்தார்கள்! நாங்கள் ஏன் கட்சியைக் கலைக்க வேண்டும்?! – ஜாஹிட்டுக்கு பாஸ் பதிலடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 17:  அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடி, பாஸ் (PAS) கட்சி கலைக்கப்பட வேண்டும் என்று கூறியதை அடுத்து, பாஸ் பொருளாளர் இஸ்கண்டார் சமாத் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்தக் கருத்து எந்த அர்த்தமும் இல்லாதது என்று அவர் கூறினார்.

ஒரு கட்சியின் தொடர்ச்சியான இருப்பே கேள்விக்குறியாக இருக்க வேண்டுமெனில், அது அம்னோவாக இருக்க வேண்டும், ஏனெனில் 15-வது பொதுத் தேர்தலில் (GE15) அம்னோ மக்களால் நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கலைப்பைப் பற்றி பேச வேண்டும் என்றால், அம்னோவையே கலைக்க வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டது அம்னோ தான். பாஸ் கட்சி, குறிப்பாக முஸ்லிம்களிடையே, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான சாட்சி அம்னோவைக் காட்டிலும் பாஸ் அதிக நாடாளுமன்ற இடங்களை வைத்துள்ளது. எனவே பாஸ் கலைக்கப்பட வேண்டும் என்று பேசுவது எந்த வகையிலும் பொருத்தமில்லை என அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *