HINDU SANGGAM , MAHIMA சுயநலத்தால் கோயில்களைப் பாதுகாக்கவில்லை! - Syed Imran சாடல்!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 18,

இப்போது பரவலாகியிருக்கும் கோயில் விவகாரத்திற்கு முக்கிய காரணமாக இந்து சங்கமும், கோயில்களின் கூட்டமைப்பு எனும் மஹிமாவும் தான் காரணம் என மலேசிய ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் Syed Imran தெரிவித்துள்ளார். உண்மையில் முறையான தலைமைத்துவம் இல்லை. முக்கிய விவகாரங்களை அடையாளம் கண்டு அதனைத் தீர்க்கும் வலிமை இந்து சங்கத்திற்கும் மஹிமாவுக்கும் இருந்தும் அவர்கள் இதைச் செய்யவில்லை என Syed Imran தனியார் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.பொறுப்பில் இருக்கும் நீங்கள் சரியாக இருந்திருந்தால் கோயில்களுக்கு இந்த பிரச்சனை இப்போது இருந்திருக்காது என Syed Imran தெரிவித்தார்.

இந்து சங்கத்தில் இருப்பவர்களும் மஹிமாவில் இருப்பவர்களுக்கும் ம.இ.காவிற்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள். ம.இ.காவின் பொறுப்புகளில் இருந்தவர்கள். 60 ஆண்டுகள் ம.இ.காவின் பாரிசான் ஆட்சியில் கோயில்களை முறையாகப் பதிவு செய்திருந்தால் இப்போது கோயில் நிலப் பிரச்சனைகள் எழுந்திருக்காது என Syed Imran தெரிவித்தார்.இந்து சங்கத்தின் தலைவருக்கும் மஹிமாவின் தலைவருக்கும் என்னுடைய இந்த கருத்து வேதனை அளித்திருக்கலாம். ஆனால் அவர்களுடையய பொறுப்பற்ற செயல். அவர்களை அவர்கள் பாதுகாத்தால் போதும் என்கிற சுயநலம் தான் இப்போது கோயில் பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது என மலேசிய ஒற்றுமை இயக்கத்தின் தலைவர் Syed Imran தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Kvnathan

சரியான கூற்று.