தைப்பூசம் - மலேசியாவின் அடையாளம்! - அன்வார்
- Shan Siva
- 01 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 1: சமய நெறியுடன் தைப்பூசத் திருநாளை அனுசரிக்கும் அனைத்து இந்துப் பெருமக்களுக்கும் வாழ்த்துகள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
தைப்பூசத் திருநாள் தியாக உணர்வும், ஆன்மீக வலிமையும் நிறைந்த ஒரு புனித நாளாகும். வழிபாட்டின் போது வெளிப்படும் பொறுமை, ஒழுக்கம், முயற்சிகளுக்கு அனைவரும் ஒன்றிணைந்து மதிப்பளிக்க வேண்டும்.
நன்றியுணர்வுடனும் ஒழுங்குடனும், சமூக வாழ்வின் அடிப்படை நெறிமுறைகளையும் பண்புகளையும் மதித்து, தைப்பூச வழிபாடு சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
நம் நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு மதம், கலாச்சாரம் சார்ந்த விழாக்களில் காணப்படும் ஒழுங்கும் ஒற்றுமையும், வேறுபாடுகளுக்கிடையே இணைந்து வாழ்வது புதிதல்ல மாறாக அது மலேசியாவின் அடையாளம் என்பதை பிரதிபலிக்கின்றன.
இந்தத் தைப்பூச வழிபாடு அனைத்து இந்துப்பக்தர்களுக்கும் மன அமைதியை அளிக்கட்டும்; அதே சமயம், பல இனங்கள் இணைந்து வாழும் நம் நாட்டில் பரஸ்பர மரியாதையும் ஒற்றுமையும் மேலும் வலுப்பெறட்டும் என்று அன்வார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



