அரசு நிலம் வழங்கினாலும் கோயில் கட்ட அனுமதிக்கமாட்டோம்! பெரிக்காத்தான் போராட்டம்!
- Thinagaren Sanggaren
- 11 Feb, 2026
பிப்ரவரி 11,
பெத்தாலிங் ஜெயாவில் கோயில் கட்டுவதற்காக அரசு நிலம் வழங்கினாலும் கோயில் கட்டுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என பெரிக்காத்தானின் Taman Medan சட்டமன்ற உறுப்பினர் Afif Bahardin போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தாலிங் ஜெயாவில் உள்ள Taman Dato Harun குடியிருப்புப் பகுதியில் தனியார் கட்டுமானப் பணிக்கான நிலத்தின் ஒரு பகுதியைச் சிலாங்கூர் மாநில அரசு Sri Maha Mariamman கோயிலுக்காக ஒதுக்கியுள்ளது.
அப்படி சிலாங்கூர் அரசு கோயிலுக்காக ஒதுக்கிய நிலத்தைச் சுற்றி இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்வதால் கோயில் அமைக்க கூடாது என பெரிக்காத்தானின் Taman Medan சட்டமன்ற உறுப்பினர் Afif Bahardin 100 மலாய்க்காரர்களுடன் போராட்டம் நடத்தினார். கடந்த ஆண்டு சிலாங்கூர் அரசு கோயிலுக்கான நிலத்தைக் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கியிருந்த நிலையில் தற்போது கோயில் நிர்வாகம் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியதும் இந்த சர்ச்சையை பெரிக்காத்தானின் Taman Medan சட்டமன்ற உறுப்பினர் Afif Bahardin எழுப்பியுள்ளார்.
இந்த பகுதியில் 90% மேலானவர்கள் இஸ்லாமியர்கள் என்றும் கோயிலுக்காக வழங்கப்பட்டிருக்கும் 10,936.12 சதுர அடி நிலம் சாலையோரம் இருப்பதால் கோயிலைக் கடந்து மசூதிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் கோயிலைக் கட்ட கூடாது என பெரிக்காத்தானின் Taman Medan சட்டமன்ற உறுப்பினர் Afif Bahardin சிலாங்கூர் அரசை வலியுறுத்தினார். அரசு கோயில்களுக்கு நிலம் வழங்கும் முன்னர், சம்மந்தப்பட்ட குடியிருப்பாளர்களிடமும் சட்டமன்ற உறுப்பினர்களிடமும் எந்தவொரு கலந்தாலோசனைக் கூட்டத்தையும் நடத்தவில்லை என பெரிக்காத்தானின் Taman Medan சட்டமன்ற உறுப்பினர் Afif Bahardin தெரிவித்துள்ளார்.
இது மலாய்க்காரர்கள் அதிகம் வாழும் குடியிருப்புப் பகுதி. இங்கே மசூதிகள் உள்ளது, மலாய்க்காரர்களின் இஸ்லாமியம் சார்ந்த பல தலங்கள் உள்ளது. இப்படியான ஒரு சூழலுக்கு நடுவே கோயிலைக் கட்ட அனுமதிக்க கூடாது என பெரிக்காத்தானின் Taman Medan சட்டமன்ற உறுப்பினர் Afif Bahardin எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *
Shan
Fuck you la



