47,250 கால்பந்து மைதானம் அளவுக்கு அழிந்துபோன பவளப்பாறைகள்! மலேசியாவுக்கு எச்சரிக்கை
- Shan Siva
- 24 Jan, 2026
கோலாலம்பூர், ஜான 24: கடந்த மூன்று ஆண்டுகளில், மலேசியா 47,250 கால்பந்து மைதான அளவுக்கு பவளப் பாறைகளை இழந்துள்ளது. Reef Check Malaysia வெளியிட்ட இரண்டாயிரத்து இருபத்தைந்து ஆண்டு ஆய்வு அறிக்கையின் படி, உயிருடன் இருக்கும் பவளப் பாறைகள் இரண்டாயிரத்து இருபத்திநான்கில் 44.65% இருந்த நிலையில், இரண்டாயிரத்து இருபத்தைந்தில் 39.94% சதவீதமாக குறைந்துள்ளன.
ஒரே ஆண்டில் இது சுமார் பத்து சதவீத இழப்பு. இரண்டாயிரத்து இருபத்திரண்டு உடன் ஒப்பிட்டால், மொத்தமாக இருபது சதவீத பவளப் பாறைகள் அழிந்துள்ளன. இந்த சரிவுக்கு காரணங்களாக, உலகளாவிய பவள வெண்மையாக்க நிகழ்வு, கட்டுப்பாடற்ற சுற்றுலா, மாசுபாடு, மற்றும் அழிவூட்டும் மீன்பிடி முறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
சபாவில் மட்டும், ஆய்வு செய்யப்பட்ட பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் டைனமைட் மீன்பிடியால் சேதமடைந்துள்ளன. இந்த பவளப் பாறைகள், சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளன.
இதனைத் தொடர்ந்து, Reef Check Malaysia, பவளப் பாறைகளை பாதுகாக்க நிலையான சுற்றுலா மற்றும் உள்ளூர் சமூகங்களின் பங்கு அவசியம் என வலியுறுத்தியுள்ளது. பவளப் பாறைகள் காக்கப்படாவிட்டால், கடலும்… வாழ்வும்… ஆபத்தில்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



