பாஸுடன் கூட்டணி வைப்போம்! - அம்னோவுக்கு அக்மால் அழைப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 12: மலக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அம்னோ மற்றும் PAS கட்சிகள் கூட்டணியாக இணைந்து போட்டியிட வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சாலே அழைப்பு விடுத்துள்ளார்.

Keluar Sekejap பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மெர்லிமாவ் சட்டமன்ற உறுப்பினரான அவர், “மலாய் அரசியல் பிளவு, பெரும்பான்மை பகுதிகளிலும் அவர்களின் செல்வாக்கை பலவீனப்படுத்தியுள்ளது. மலாய் ஒற்றுமையை விரும்பினால், இப்போது தொடங்க வேண்டும். பேசுவது போதாது; மலக்காவில் அதை நிரூபிக்க வேண்டும் என்று கூறினார்.

கடந்த மலாக்கா தேர்தலில் PAS எந்த இடத்தையும் வெல்லாதபோதிலும், சில தொகுதிகளில் அம்னோ இடம் விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நகரப்புறங்களைத் தவிர, கிராமப்புற மற்றும் அரை கிராமப்புற பகுதிகளில் மலாய்காரர்கள் அரசியல் பிளவை குறித்து அதிகமாக கவலைப்படுகின்றனர் என்றும் அக்மால் கூறினார். அம்னோ இழந்த வாக்குகள் பக்கத்தான் ஹரப்பானுக்கு அல்ல; PAS மற்றும் பெரிகாத்தான் நேஷனலுக்கே சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அம்னோ–PAS கூட்டணி அமைந்தாலும், பாரிசான் நேஷனல் கட்டமைப்பு தொடரும்; பிற இனங்களின் உரிமைகள் புறக்கணிக்கப்படமாட்டாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

2021 லாக்கா  தேர்தலில் 28 இடங்களில் 21 இடங்களை BN வென்றது. மலாக்கா மாநில சட்டமன்றத்தின் ஐந்தாண்டு காலம் இவ்வருடம் டிசம்பரில் முடிவடைகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *