புதிய தலைவர்களை உருவாக்குவேன்! - அக்மால் சபதம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 17:அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சாலே, மலாக்கா மாநில அரசின் செயற்குழு உறுப்பினர் (Exco) பதவியை ராஜினாமா செய்ததற்கு விளக்கம் அளித்துள்ளார். மாநில அரசில் பதவி இல்லாததால், நாடு முழுவதும் உள்ள அம்னோ இளைஞர் பிரிவுகளை நேரடியாகச் சந்தித்து, வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான தயாரிப்புகளை சிறப்பாக மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

அம்னோ பொதுக்கூட்டத்தில் தனது நிறைவுரையில் பேசிய அக்மால், மாநில அரசுப் பொறுப்பு இல்லாத நிலையில், ஒவ்வொரு அம்னோ இளைஞர் பிரிவையும் தனித்தனியாக ஆய்வு செய்து, தேர்தல் தயாரிப்புகளை ஒழுங்குபடுத்த முடியும். கடவுள் அருளால், அம்னோ மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாக மாறும் என்றார்.

மேலும், கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிராக களம் காண புதிய தலைவர்களை உருவாக்குவேன் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும், போட்டியாளர்களுக்கு எதிராக 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட ‘அக்மால் சாலே’களை உருவாக்குவேன் என அவர் கூறினார். இது, மறைமுகமாக அம்னோவின் அரசியல் எதிரிகளை குறிப்பதாகும்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *