கோயிலை இடித்தவர்கள் கைது! அவர்களின் எந்திரமும் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 12: சிலாங்கூர், ராவாங்கில் உள்ள ஒரு இந்துக் கோயிலை இடிக்க முயன்றதாக கூறப்படும் நால்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோயில் நிர்வாகத்துடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல், உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமலும் சந்தேகநபர்கள் கோயிலின் ஒரு பகுதியை இடித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் தெரிவித்தார்.

26 முதல் 39 வயதுக்குட்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஒது backhoe இயந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, வழிபாட்டு தலத்திற்கு சேதம் விளைவித்தல், அமைதிக்கேடு ஏற்படுத்தும் நோக்கில் அவமதித்தல், குற்றப்பிரவேசம் மற்றும் சொத்துச் சேதம் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பொதுமக்கள் ஊகங்களைக் கிளப்பாமல், அமைதியாகவும் பொறுப்புடனும் இருக்க வேண்டும். இன, மத வெறுப்பை தூண்டும் அல்லது பொது அமைதியை பாதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட வேண்டாம். சட்டத்தின் அடிப்படையில், தொழில்முறையாகவும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் விசாரணை நடைபெறும் என்பதை உறுதியளிக்கிறோம்என ஷாசெலி கூறினார்.
கடந்த சனிக்கிழமை ‘சட்டவிரோத’ வழிபாட்டு தலங்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட பேரணியில் ஈடுபட்டவர்களில் ஒருவராக இருந்த செயற்பாட்டாளர் தமிம் தாஹ்ரியும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என Malaysiakini தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *