PN அடுத்த தலைவர் யார்? - தலைமைத்துவ மன்றம் விரைவில் அறிவிக்கும்
- Shan Siva
- 14 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 14: கூட்டணியின் புதிய தலைவரைத்
தேர்ந்தெடுப்பதற்கான பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின்
அவசரக் கூட்டத்திற்கான தேதியை கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் விரைவில் அறிவிக்கும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தை இன்று திரெங்கானு
மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தாரின் செய்தித் தொடர்பாளர்
முகமட் நசீர் அப்துல் ரசாப் தெரிவித்தார்.
பெரிகாத்தான் நேஷனல்
கூட்டத்திற்கான தேதி கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்தால் விரைவில் அறிவிக்கப்படும்.
இப்போதைக்கு, எதுவும் இறுதி செய்யப்படவில்லைஎன்று
அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
திரெங்கானு மாநில நிர்வாகக்
குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அஹ்மத் சம்சூரி இன்று கோலாலம்பூருக்கு வருகை தந்தார்.
முன்னதாக, ஜனவரி 1 முதல் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் பதவி விலக முடிவு செய்ததைத் தொடர்ந்து,
எதிர்க்கட்சி கூட்டணியை வழிநடத்த புதிய தலைவரை
நியமிப்பது குறித்து விவாதிக்க பாஸ் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



