மோடிக்கு உற்சாக வரவேற்பு! விமான நிலையத்தில் அன்வார் வரவேற்றார்!
- Shan Siva
- 07 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 7: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இரண்டு நாள் அதிகாரப்பூர்வ விஜயமாக மலேசியா வந்தடைந்தார்.
மோடியை ஏற்றிய விமானம் மாலை 4.40 மணியளவில் கோலாலம்பூர்
சர்வதேச விமான நிலையம் (KLIA) வந்தடைந்தது. அங்கு அன்வார் இப்ராஹிம் மற்றும் மனிதவள
அமைச்சர் ஆர். ராமணன் அவரை அன்புடன் வரவேற்றனர்..
காவல் அணிவகுப்பை மோடி ஏற்றுக்கொண்டு மாணவர்களைப் பார்த்துக்
கையசைத்தார். மலேசியா மற்றும் இந்தியா தேசியக் கொடிகளை அசைத்த 100
மாணவர்கள் அவரை
வரவேற்றனர். இதனுடன், பாரம்பரிய தாளவாத்திய இசை மற்றும் மலேசியாவின் பல இனப்
பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மைன்ஸ் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு
மையத்தில் நடைபெற்ற சமூக நிகழ்வில் மோடி கலந்து கொண்டார்.
நாளை, மோடி மற்றும் அன்வார் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வர்த்தகம்,
முதலீடு,
பாதுகாப்பு,
கல்வி, சுற்றுலா,
விவசாயம்
மற்றும் பிராந்திய விவகாரங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்க
உள்ளனர்.
இந்த விஜயம், 1957-ஆம் ஆண்டு தூதரக உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து
மலேசியா–இந்தியா இடையே நிலவும் நீண்டநாள் நட்பை அடிப்படையாக கொண்டு, இருதரப்பு
உறவுகளை மேலும் வலுப்படுத்தி, பரஸ்பர நன்மை தரும் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



