வழிபாட்டுத்தலங்கள் தொடர்பாக தானாக சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம்! - அன்வார் எச்சரிக்கை
- Shan Siva
- 12 Feb, 2026
PETALING JAYA: அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகக் கூறப்படும் வழிபாட்டு தலங்கள் தொடர்பாக யாரும் தங்களாகச் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று பிரதமர் டத்துக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
Associated Chinese Chambers of Commerce and Industry of Malaysia ஏற்பாடு செய்த சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் பேசிய அவர், மலேசியா சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் நாடு என்றும், எந்த நபருக்கும் அல்லது குழுவிற்கும் தங்களது உணர்ச்சிகள் அல்லது விருப்பங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உரிமையில்லை என்றும் தெரிவித்தார்.
இந்த நாடு விதிமுறைகளும் சட்டங்களும் அடிப்படையாக கொண்டதேயாக இருக்க வேண்டும்; தனிநபர்களின் விருப்ப வேட்கைகளின் அடிப்படையில் அல்ல. யாருக்கும் தங்களாகச் சட்டத்தை கையில் எடுக்க எந்த உரிமையும் இல்லை என்று அவர் கூறினார்.
சமீபத்தில் விதிமுறைகளை பின்பற்றவில்லை எனக் கூறப்படும் சில வழிபாட்டு தலங்கள் குறித்து ஏற்பட்ட சர்ச்சைகள் மற்றும் அவற்றை இடிக்க வேண்டும் என்ற பிரசாரம் ஆகியவற்றின் பின்னணியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
“மலேசியா சட்டத்தின் நாடாகும். பிரச்சினைகள், சர்ச்சைகள், கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாப்பதும், ஒவ்வொருவரின் மத நம்பிக்கையின் புனிதத்தன்மையை காக்கவும், மக்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தவும் என்பதே முன்னுரிமை,” என்றார்.
சரியான நடைமுறைகளை பின்பற்றாமல் கோயில்கள் கட்டப்பட அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். சீன கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் சுராக்கள் விதிமுறைகளை பின்பற்றியுள்ளன என்றும், பெரும்பாலான இந்துக் கோயில்களும் அதேபோல் செயல்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,சிறிய பொறுப்பற்ற குழுவின் செயலால் நாட்டின் நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது” என்று எச்சரித்த அவர், தவறான செயல்களைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், எந்த வழக்கும் நீதிமன்றத்தின் மூலம் தீர்க்கப்படும் என்றும் கூறினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



