ஹம்சா பதவி விலக - முகைதீன் ஆதரிக்கிறாரா?! பெர்சாத்து உறுப்பினர் கேள்வி
- Shan Siva
- 04 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 4: பெர்சாத்து துணைத் தலைவர் ஹம்சா சைனுடின் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி தலைவர் முகைதீன் யாசின் ஆதரிக்கிறாரா என, பெர்சாத்துவின் தங்கா பத்து பிரிவுத் தலைவர் ரம்லான் மேயோன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துன் ஃபைசால் இஸ்மாயில் அசீஸ்
வெளியிட்ட கருத்துகள், பெர்சாத்து உச்ச மன்றத்தின்
அனுமதியின்றி கூறப்பட்டவை என்றும், அவை கட்சியின் நிலைப்பாட்டை தவறாக
வெளிப்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் கூறினார்.
எப்போது இருந்து ஒரு தகவல் தலைவர், கட்சியின்
உயர்தலைவரை வெளிப்படையாக தாக்க அனுமதி பெற்றார்?
என்று ரம்லான் கேள்வி எழுப்பினார்.
மேலும், துணைத் தலைவரை விமர்சித்ததற்காக துன்
ஃபைசாலை ஒழுக்கக்குழுவின் முன் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
துன் ஃபைசாலின் நடவடிக்கைகள் கட்சியின்
பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், அவரை
அந்தப் பதவிக்கு நியமித்த முகைதீன் யாசினின் மீதும் அது எதிர்மறை தாக்கத்தை
ஏற்படுத்துவதாகவும் ரம்லான் தெரிவித்தார்.
முன்னதாக, பெர்சாத்து
உச்ச மன்ற உறுப்பினர் யூனுஸ் நூர்டின், முகைதீன்
யாசின் பதவி விலக வேண்டும் எனக் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த துன் ஃபைசால்,
முகைதீன் அல்ல, துணைத் தலைவர் ஹம்சா சைனுடினே பதவி விலக
வேண்டும் என்று கூறினார்.
சபா மாநில தேர்தல் இயக்குநராக ஹம்சா
தோல்வியடைந்ததாகவும், அந்தத் தேர்தலில் பெர்சாத்து ஒரு
இடத்தையும் வெல்லவில்லை என்றும் துன் ஃபைசால் குற்றம்சாட்டினார். மேலும், கட்சிக்குள் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதால், ஒழுக்க விதிமுறைகள் மீறப்படுவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பெரிக்கத்தான்
நேஷனல் (PN) தலைவர் பதவி தொடர்பாக பாஸுடன் நடந்த
பேச்சுவார்த்தைகளை முகைதீன் தவறாக கையாண்டார் என்ற குற்றச்சாட்டுகளையும் துன் ஃபைசால்
மறுத்தார். அந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் முன்மொழிவு நிலையிலேயே உள்ளன என்றும்
அவர் விளக்கினார்.
இதனிடையே ரம்லானின் விமர்சனத்திற்குப் பதிலளித்த துன் ஃபைசால்,
கட்சி உறுப்பினர்கள் இரட்டை நிலைப்பாடு எடுக்கக் கூடாது என
கூறினார். தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சி தலைவர் பதவி விலக வேண்டும் என
தொடர்ந்து கேட்கலாம். ஆனால், துணைத் தலைவர் தனது தோல்விகளுக்காக பதவி
விலக வேண்டும் என சொன்னால், அதற்கு கோபப்படுவது சரியல்ல என அவர்
தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



