ஊழல் வழக்கிலிருந்து முழுமையாக விடுவியுங்கள்! - ஜாஹிட் மனு தாக்கல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 3: அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி, யாயாசான் அகல்புடி ஊழல் வழக்கில் தன்னை முழுமையாக வழக்கிலிருந்து விடுவிக்க (full acquittal) கோரி,  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு, கடந்த ஜனவரி 8 ஆம் தேதி, ஆதாரங்கள் போதியதாக இல்லாத காரணத்தால் இந்த வழக்கில் மேலதிக நடவடிக்கை தேவையில்லை (NFA – No Further Action) என சட்டத்துறை தலமை அலுவலகம் அறிவித்ததைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, ஜாஹிட் ஹமிடிக்கு வழக்கிலிருந்து விடுவித்தல் ஆனால் முழு நிரபராதம் அல்ல (DNAA) என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது, அவர் ஜனவரி 28 அன்று அவசர சான்றிதழுடன் (certificate of urgency) இணைத்து, முழுமையான விடுதலைக்கான இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை இன்று விசாரிக்க நீதிபதி நுருல்ஹுடா நுரையினி நூர் நிர்ணயித்திருந்தார். எனினும், துணை அரசு வழக்கறிஞர் பாதியுஸ் ஜமான் , வழக்குத் தொடர்பான ஆவணங்கள் கடந்த வெள்ளிக்கிழமை மட்டுமே AGC-க்கு வழங்கப்பட்டதாக கூறி, விசாரணையை ஒத்திவைக்க கோரினார்.

இதற்குப் பதிலளிக்கும் உறுதிமொழி தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக அரசுத் தரப்பிற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் தேவை என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதி பிப்ரவரி 24-ஆம் தேதியை இந்த மனுவின் விசாரணைக்காக நிர்ணயித்தார்.

கடந்த 2024 செப்டம்பர் 4 அன்று, விசாரணை நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வேரா, மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் மேலதிக விசாரணை நடத்துவதற்காக, ஊழல், பணம் சுத்திகரிப்பு மற்றும் குற்றமான நம்பிக்கை மீறல் தொடர்பான 47 குற்றச்சாட்டுகளில் ஜாஹிட் ஹமிடிக்கு DNAA வழங்கியிருந்தார்.

அதே நேரத்தில், அரசுத் தரப்பு அனைத்து குற்றச்சாட்டுகளிலும் முதற்கட்ட ஆதாரங்களை  வ்நிரூபித்துள்ளதாக நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது. DNAA வழங்கப்படுவதற்கு முன், ஜாஹிட் மற்றும் பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த பல சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சி அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *