செலவைக் குறையுங்கள் - சேமிப்பு அவசியம்! - அன்வார் எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

புக்கிட் மெர்தாஜாம், மார்ச் 8: : உலகளாவிய பொருளாதார அசாதாரண நிலைமைகளை முன்னிட்டு மக்கள் செலவுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் டதோஸ்ரீ Anwar Ibrahim அறிவுறுத்தியுள்ளார்.

Bukit Mertajam பகுதியில் உள்ள Masjid Mengkuang Titi பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், மலேசியாவின் உள்நாட்டு பொருளாதாரம் தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், சர்வதேச அரசியல் நிலவரங்கள் வெளிப்புற ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்றார்.

சர்வதேச நிலைமைகளை பற்றி  தாம் பேசுவது. நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்  என்று அவர் கூறினார். மேலும், மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் மோதல்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியை கடுமையாக பாதிக்கக்கூடும் என்றும், இதனால் பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

Strait of Hormuz வழியாகச் செல்லும் பெரிய கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக 200-க்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த அதிகரிப்பு உணவு மற்றும் உரம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் Ukraine, Russia மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு மற்றும் உரங்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இந்த நிலையை சமாளித்து உள்நாட்டு சந்தையில் அதன் தாக்கத்தை குறைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார். எனவே மக்கள் முன்னெச்சரிக்கையாக சிக்கனமாக வாழவும், சேமிப்பை அதிகரிக்கவும் வேண்டும் என்பதை நினைவூட்டுவது தமது பொறுப்பு என Anwar Ibrahim வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *