நாட்டின் வலிமை இளம் பட்டதாரிகளிடம்தான் உள்ளது! – மாமன்னர்
- Shan Siva
- 02 Dec, 2025
கோலாலம்பூர், டிச 2: மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நாட்டின் பட்டதாரிகள் தங்கள் அறிவை சமூகத்திற்கு சேவை செய்யவும், எதிர்காலத் தலைவர்களாகவும், நாகரிகத்தை உருவாக்குபவர்களாகவும் மாறவும் பயன்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
பல்கலைக்கழகத்தில்
பெறப்பட்ட அறிவு தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக மட்டும் பயன்படுத்தப்படாமல்,
அனைவரின் நலனுக்காகவும் பயன்படுத்தப்பட
வேண்டும் என்று அவர் கூறினார்.
இஸ்லாமிய வரலாறு
முழுவதும், அறிவு மக்களை
அறியாமையிலிருந்து அறிவொளிக்கு வழிநடத்தியுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
பட்டதாரிகள் தங்கள்
துறைகளில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், நேர்மையையும் கொண்டவர்களாகவும், நாட்டிற்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் இருக்கும் இளம்
தலைவர்களாகவும் மாற வேண்டும் என்று நாடு நம்பிக்கை வைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பட்டதாரிகள் தங்களின் அறிவை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி,
தேசத்திற்கு மதிப்புமிக்க இளம் தலைவர்களாக
மாறுங்கள் என்று மாமன்னர் கேட்டுக்கொண்டார்.
பட்டதாரிகள் தங்கள்
பெற்றோர் தங்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கக் கூடாது, த நாட்டின் அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்
வகையில் செயல்படக்கூடாது என்று அவர் இன்று புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் கூறினார்.
விழாவில், மொத்தம் 783 பட்டதாரிகள் இளங்கலைப் பட்டங்களையும், 78 பேர் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களையும்,
149 பேர் டிப்ளோமாக்களையும் பெற்றனர்.
ஒரு நாட்டின் வலிமை அதன்
இளம் பட்டதாரிகளிடம்தான் உள்ளது என்றும், அவர்கள் நாட்டின் எதிர்கால வெற்றி அல்லது தோல்வியின் முக்கிய குறியீடுகளாக இருப்பதாகவும், சுல்தான் இப்ராஹிம் கூறினார்.
சைதினா அலி அபி தாலிப்
(நான்காவது ரஷீதுன் கலீஃபா) ஒருமுறை கூறினார்: ‘ஒரு நாட்டின் எதிர்காலத்தை நீங்கள்
காண விரும்பினால், இன்றைய அதன் இளைஞர்களைப்
பாருங்கள்’ என்று பொன்மிழியை மாமன்னர் சுட்டிக்காட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



