நான் சீனர்களுக்கு எதிரானவன் அல்ல! என் மாமியார் குடும்பமே சீனர்தான் - அக்மால் சலே
- Shan Siva
- 12 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 12: தாம் சீனர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், DAP-க்கு மட்டுமே எதிரானவன் என்றும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சலே தெரிவித்துள்ளார். DAPக்கு எதிரான தமது நிலைப்பாடு அரசியல் கொள்கைகளை பற்றியது மட்டுமே என்றும் அம்னோ அவர் கூறினார்.
DAP-க்கு எதிர்ப்பது அதன் கொள்கைகளுக்கே;
சீன இனத்துடன் அதற்கு சம்பந்தமே இல்லை. என் மாமியார் குடும்பமே
சீனர் குடும்பம்தான்
என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், நுணுக்கமான
விவகாரங்கள் கவனமாக கையாளப்பட்டால் அரசில் DAP அரசியல்வாதிகளுடன்
இணைந்து பணியாற்ற முடியும் என்றும் தெரிவித்தார். DAP-இல்
சில தலைவர்கள் மிதமானவர்களாக உள்ளனர் என்று
குறிப்பிட்ட அவர், லோக்
சியூ ஃபூக் மற்றும் ஸ்டீவன் சிம் ஆகியோரை
சுட்டிக்காட்டினார்.
DAP-க்கு தன் இனமே உயர்ந்தது எனப்படும் “சோவினிஸ்ட் DNA” இருப்பதாக
கூறிய அக்மால், அது மாற முடியும், ஆனால் 10 முதல் 20 ஆண்டுகள்
பிடிக்கும் என்றார்.
தனது கடுமையான அணுகுமுறையை
விளக்கும்போது, “நான் தாக்கவில்லை; பாதுகாக்கிறேன். யாராவது வரம்பு மீறினால் தான் பதிலளிக்கிறேன்,”
என்று கூறிய அவர், தலைகீழ்
கொடி, ‘அல்லாஹ்’ காலுறை விவகாரம், UEC அங்கீகாரம், கம்பூங் பாரு மறுசீரமைப்பு போன்றவற்றை
எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார்.
இன அடிப்படையிலான அரசியல் விவாதங்கள் தொடர்வது ஆரோக்கியமற்றது
என்றும், “நான் தொடங்கவில்லை; மீண்டும் மீண்டும் இவ்விஷயங்கள் எழுந்தால், அதை நிறுத்த சொல்ல வேண்டும்,” என்றும்
அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



