மனிதவள அமைச்சுக்கு மாற்றப்பட்ட MITRA!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 27,

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ரா இனி மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் என மனிதவள அமைச்சர் Dato’ Sri Ramanan அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். MITRA எனும் மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு பிரதமர் துறையில் ஒருமைப்பட்டு அமைச்சுக்கு மாற்றப்பட்டு மீண்டும் பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் மித்ராவின் சிறப்புப் பணிக்குத் தலைவராகப் பொறுப்பிலிருந்தார்.

தற்போது 2026 ஆம் ஆண்டு மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ரா மனிதவள அமைச்சின் கீழ் ஒரு சிறப்புப் பிரிவாக இயங்கும் என மனிதவள அமைச்சர் Dato’ Sri Ramanan தெரிவித்தார். இன்று மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் இந்து கோயில்களுக்கு மானியம் வழங்கப்படும் நிகழ்ச்சியின் போதும் ரமணன் மித்ராவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். 

மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவான மித்ராவின் மூலம் இந்து கோயில்கள் சமூகப்பணிகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 3.1 மில்லியன் ரிங்கிட் 155 கோயில்களுக்கு இன்று வழங்கப்பட்டது. மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தலைமையிலான Dharma MADANI எனும் இத்திட்டம் பிரதமரின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்த Dharma MADANI திட்டத்தைச் செயல்படுத்த 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார். 

ஒவ்வொரு கோயில்களுக்கும் தலா 20,000 ரிங்கிட் வழங்கப்படும் என்பதால் தற்போது முதற்கட்டமாக 155 கோயில்களுக்கு நிதி வழங்கப்படுவதாகவும் கட்டம் கட்டமாக 20 மில்லியன் ரிங்கிட் நிதி இத்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்படும் என டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *