நள்ளிரவில் கோயிலை உடைத்த மர்மக் கும்பல்! பின்னணியில் TAMIM DHARI?
- Thinagaren Sanggaren
- 11 Feb, 2026
பிப்ரவரி 11,
சிலாங்கூரில் உள்ள தாமான் ராவாங் பெர்டானாவில் அமைந்துள்ள ஒரு கோயிலை நள்ளிரவில் மர்மக் கும்பல் அடித்து உடைத்தது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் Hindu Temples Task Force எனும் தன்னார்வ அமைப்பு, இந்த கோயில் இடிப்பின் பின்னணியில் TAMIM DHARI எனும் ஆடவர் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தாமான் ராவாங் பெர்டானாவில் அமைந்து அந்த சிறிய கோயில் நள்ளிரவில் உடைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்ததும் கோம்பாக் காவல்துறை இன்று காலை நில உரிமையாளரான Ustaz Ismail Mina எனும் மத போதகரையும் Tamim Dahri எனும் ஆடவரை விசாரணைக்காக அழைத்துள்ளது.
இது தொடர்பாக AIDIL KHALID எனும் ஆடவர் தாமான் ராவாங் பெர்டானாவில் அமைந்துள்ள கோயில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் Yayasan Kubra எனும் மலாய் அமைப்புக்குச் சொந்தமானது என்பதால் கோயிலை இடிக்க Tamim Dahri எனும் ஆடவருடன் சென்றதாகவும் கோயிலை இடிக்கும் போது பொதுமக்கள் சூழ்ந்ததால் தற்காப்புக்காக Tamim Dahri காவல் நிலையத்திற்கு அவசர அழைப்பை விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் Tamim Dahri உட்பட மேலும் இருவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக AIDIL KHALID எனும் ஆடவர் சமூக வலைத்தலத்தில் பதிவேற்றியுள்ளார்.
இந்து கோயில்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட Tamim Dahri எனும் ஆடவரின் தூண்டுதலால் தாமான் ராவாங் பெர்டானாவில் அமைந்து அந்த சிறிய கோயில் நள்ளிரவில் உடைக்கப்பட்டிருந்தால் இந்திய சமூகத்திடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தும். அரசு அல்லது தனியார் நிலங்களில் கோயில்கள் இருந்தால் முறையாக நகராண்மைக் கழகத்தில் புகார் அளித்து கோயில் பராமரிப்பாளர்களுடன் கலந்துரையாடி கோயிலை முறையாக இடமாற்ற வேண்டும் என Hindu Temples Task Force எனும் தன்னார்வ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



