கோலாலம்பூர், பிப் 23: இன்று
அதிகாலை சபா கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கம், கடந்த 11 ஆண்டுகளில் நாட்டைத்
தாக்கியதில் மிக வலிமையானது என்று கணிக்கப்பட்டுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு
மையமான மெட் மலேசியாவின் பதிவுகளின்
அடிப்படையில், மலேசியாவில் இதற்கு
முன்பு ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் ஜூன் 5, 2015 அன்று சபாவின் ரானாவ் நகரில் ஏற்பட்டது என்று மெட்மலேசியா
இயக்குநர் ஹிஷாம் அனிப் தெரிவித்தார்.
6.0 ரிக்டர் அளவிலான
அந்த நிலநடுக்கத்திற்கு 18 பேர்பலியாகினர். இது இன்னும் மலேசியாவின்
வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதனிடையே இன்று காலை
ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கருத்து தெரிவித்த ஹிஷாம், சபாவின் கடற்கரையில் ஏற்பட்டதாகக் கூறினார்.
பூகம்பத்தின் மையப்பகுதி
பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் 678 கி.மீ ஆழத்தில் இருந்ததால், பொதுமக்களால் லேசான
நிலநடுக்கங்கள் மட்டுமே உணரப்பட்டதாக அவர் கூறினார்.
சபா கடற்கரையில் நள்ளிரவு
12.57 மணிக்கு 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டதாக மெட்மலேசியா இன்று காலை செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
சபாவின் குடாட்டிலிருந்து
மேற்கே சுமார் 49 கி.மீ தொலைவில்
மையப்பகுதி அமைந்திருந்தது, மேலும் சபா, சரவாக் மற்றும் தீபகற்ப மலேசியாவின் சில பகுதிகளில்
நிலநடுக்கம் உணரப்பட்டது!