அந்தக் குரல்கள் அர்த்தமற்றவை! - அன்வார்
- Shan Siva
- 04 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 4: நாட்டில் "உண்மையை எதிர்க்கவும், பிற இனங்கள் மீது வெறுப்பை வளர்க்கவும்" முயலும் குரல்களை பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், அவர்களுக்கு எதிராக எழுந்து நிற்குமாறு நாட்டின் இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இளைஞர்களிடையே வலுவான குணநலன்களும் சமூக விழிப்புணர்வும் இல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அர்த்தமற்றவை என்று அவர் கூறினார்.
மனிதநேயம் சிதைக்கப்பட்டால், செயற்கை நுண்ணறிவால் என்ன பயன்? நாம் மனித மாண்பை உயர்த்த விரும்புகிறோம். அதனால்தான் ஒழுக்கம், கலாச்சாரம் மற்றும் நல்லுறவுகள் முக்கியமானவை என்று தான் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருவருக்கொருவர் மீதான வெறுப்பையும் இகழ்ச்சியையும் கைவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், எல்லோரும் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்பிக்கையைக் குலைக்கவும், உண்மையை எதிர்க்கவும், பிற இனங்கள் மீது வெறுப்பை வளர்க்கவும் முயலும் குரல்கள் உள்ளன. அவர்களுக்கு எதிராக நமது இளைஞர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று என்று குவாந்தானில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் இளைஞர்களை உருவாக்குவதற்கு, வலுவான ஒழுக்க அடித்தளத்துடன் கூடிய முழுமையான கல்வி மிகவும் முக்கியமானது என்று அன்வார் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



