சீன மாமியார் கதையை நிறுத்துங்கள் – அக்மாலுக்கு DAP தெங் சாங் கிம் பதில்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 12: தாம் சீன விரோதியல்ல என்பதற்கான ஆதாரமாக “என் மாமியார் குடும்பம் சீனர்” என்று கூறிய அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சாலேவின் விளக்கத்துக்கு, DAP-ஐச் சேர்ந்த சிலாங்கூர் மாநில முன்னாள் செயற்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் கடுமையாக பதிலளித்துள்ளார்.

தமது பேஸ்புக் பதிவில், “உங்கள் சீன மாமியார் கதையை எங்களுக்குச் சொல்லுவதை நிறுத்துங்கள்என அவர் தெரிவித்தார்.

நீங்கள் சீனர்களின் நாட்டுப்பற்றை கேள்விக்குறியாக்கும்போது, அது DAP-ஐ அல்ல, சீனர்களையே வெறுப்பதாக நிரூபிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இது ஜாலூர் கெமிலாங் கொடி தலைகீழாக காட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக அக்மால்  முன்பு வெளியிட்ட கருத்துகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

முன்னதாக ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அக்மால், தாம் சீன விரோதியல்ல என்றும், DAP-க்கு எதிரான தமது நிலைப்பாடு அரசியல் கொள்கைகளை சார்ந்ததே என்றும் கூறியிருந்தார். அதற்கான உதாரணமாக தனது  மாமியார் குடும்பம் சீனர்  எனவும் அவர் தெரிவித்திருந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *